இயற்கைக்கும்
இயல்பு மனிதனுக்கும்
எப்போதும் உண்டு
இரண்டு முகங்கள்.
காற்றுக்கு தென்றல் புயல்
கடலுக்கு அழகு அழிவு
பூமிக்கு இருள் பகல்
காதலுக்கு மலர் முள்
உள்ளத்துக்கு வெல்லம் கள்ளம்
அறிவுக்கு தொட்டி கேணி
உறவுக்கு காகம் நாகம்
குணத்துக்கு ஆடு நரி.
பதம் பார்க்க
சில சோறுகள் இவை
அணுவுக்குள்ளும் இரண்டு முகங்கள்
புரோட்டான் எலக்ட்ரான்.
அவனின்றி இது இல்லை
இவனின்றி அது இல்லை
ஒன்றில் மறந்து இன்னொன்று
எதற்குமே இல்லை சொந்த முகம்.
இயற்கைக்கும் சரி
இயல்பு மனிதனுக்கும் சரி
இன்று ஒரு முகம்
நாளை வேறு முகம்.