உல‌க‌ம்

உல‌க‌ம்

tm logo
Wednesday, February 22nd, 2012
ஜப்பானில் தோக்கியோ அருகே உள்ள ஒரு நகரில் ஒரு வீட்டில் மூன்று பேர் இறந்து கிடந்ததை போலிசார் கண்டனர்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் இறந்து கிடந்ததாகவும் அவர்கள் இறந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியிருக்கலாம் என்றும் போலிஸ் வட்டாரங்கள் கூறின.
 அவர்கள் பட்டினியால் இறந்ததாக தெரியவந்துள்ளது என்று போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தப் பெற்றோருக்கு 60 வயதிருக்கலாம் என்றும் மகனுக்கு 30 வயதிருக்கலாம் என்றும் அவர் சொன்னார்.
அவர்கள் தங்கியிருந்தது ஒரு வாடகை வீடு. அவர்கள் வீட்டு வாடகை ஆறு மாதங்களாக செலுத்தாமல் இருந்ததால் மின்சாரம், எரிவாயு விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தன. தண்ணீரை மட்டுமே குடித்து அந்தக் குடும்பத்தினர் உயிர்வாழ்ந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. அந்த வீட்டில் சில்லறைக் காசுகள் மட்டும் காணப்பட்டதாக போலிசார் கூறினர்.
அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் அழுகிப் போயிருந்ததாகவும் போலிசார் கூறினர்.  

tm logo
Wednesday, February 22nd, 2012
அம்மான்: சிரியாவில் ஹோம்ஸ் நகரில் பாதுகாப்புப் படையினர் பீரங்கித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 100 பேர் காயம் அடைந்ததாகவும் தொண்டர்கள் கூறியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான விடுதலை சிரிய ராணுவம், பாதுகாப்புப் படையினரை பாபா அம்ரோ நகருக்குள் நுழைய விடாமல் தடுத்த போதிலும் அரசாங்கப் படையினர் வெகு தொலைவிலிருந்து பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக தொண்டர் ஒருவர் கூறினார்.
tm logo
Wednesday, February 22nd, 2012
ஜோகூர் பாரு: நாணய மாற்று வியாபாரி ஒருவரிடம் பணம் கொள்ளையடித்ததன் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் மலேசியாவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஜோகூர் பாரு மற்றும் நெகிரி செம்பிலானில்  மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது  அந்த சந்தேகப் பேர்வழிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாகவும்  அவர்கள் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் போலிசார் கூறினார். அந்த மூவர் கைது செய்யப்பட்டிருப்பதை மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.  
அந்த மூவரும் ஆயுதக் கொள்ளையில் ஈடுபட்டது,  சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது தொடக்க  விசாரணையில்  போலிசாருக்கு தெரியவந்தது.
tm logo
Wednesday, February 22nd, 2012

ஏதென்ஸ்:  கடன் சுமையில்  சிக்கித் தவிக்கும் கிரீஸ் நாட்டிற்கு 130 பில்லியன் யூரோ கடன் உதவி வழங்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.   
பிரசல்ஸில் ஒன்றுகூடிய ஐரோப்பிய ஒன்றிய  நாடுகளின் நிதி அமைச்சர்கள்  13 மணி நேரங்கள் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் இந்த இணக்கம் காணப்பட்டது.

கிரீஸ் நொடித்துப் போகும் நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க அந்நாட்டுக்கு  மார்ச் 20ம் தேதிக்குள் கடன் உதவி அவசியம் தேவைப்படுகிறது.  

இதனால் கிரீஸ் நாட்டைக் காப்பாற்ற யூரோ மண்டல நாடுகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தன. முடிவில் அந்நாட்டுக்கு இரண்டாவது கடன் உதவித் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன.

christchurch
Wednesday, February 22nd, 2012
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரை சென்ற ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி பயங்கர நிலநடுக்கம் உலுக்கியபோது  சேதமடைந்த பல கட்டடங்களுள் இந்த தேவாலயமும் ஒன்று. நிலநடுக்கம் ஏற்பட்டு ஓராண்டு ஆன போதிலும் சேதமடைந்த பல கட்டடங்கள் இன்னும் சீரமைக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. படம்: ஏஎப்பி
Syndicate content