இந்தியா

chennai fog
Tuesday, February 21st, 2012

சென்னை உட்பட தமிழ் நாட்டின் பல நகரங்களில் நேற்று அதிகாலை 4.3 மணியில் இருந்து கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால், ரயில், பேருந்து, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானது. சாலை களில் வாகனங்களில் சென்றோர் தடுமாற்றத்துக்குள்ளானார்கள்.
அத்தனை பேரும் முகப்பு விளக்கை போட்டபடி பயணித்தனர் என செய்திகள் கூறின.
ஏறக்குறைய 150 மீட்டர் தூரத்துக்கே பார்க்கக் கூடியதாக இருந்ததாக வான்வெளி  வானிலை அலுவலக தின் சென்னை பிரிவு இயக்குநர் ஆர்.சுரேஷ் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டது.
எதிரில் நிற்பவர் தெரியாத அளவுக்கு மிக அடர்த்தியாக பனி மூட்டம் இருந்தது. பனி மூட்டம் சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி என தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஒரே சமயத்தில் காணப்பட்டது.
முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்

KARUNA-STALIN-NEHRU FAMILY
Tuesday, February 21st, 2012
திமுக தலைவர் கருணாநிதியின் மகன்களான ஸ்டாலின் - அழகிரி இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில், ஸ்டாலின் கோஷ்டியை சேர்ந்த திருச்சி மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான நேரு மகன் திருமணம் கருணாநிதி குடும்ப விரிசலை முற்ற வைத்துள்ளது.
நிகழ்ச்சியின் போது கருணாநிதியும் ஸ்டாலினும் நடந்து கொண்ட விதம் இருவருக்கும் இடையேயான நெருக்கம் குறைந்து இருப்பதைக் காட்டியது.
வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தந்தைக்கு அருகில் அமர்ந்து அவருடன் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார் ஸ்டாலின். அன்று, கருணாநிதிக்கு மூன்று நாற்காலிகள் தள்ளி அமர்ந்ததோடு, நிகழ்ச்சி முழுக்க அவருடன் ஒரு வார்த்தைகூடப் பேசவும் இல்லை.
இருவருக்கும் இடையேயான கனத்த மௌனம் திமுக ஆதர வாளர்களுக்கிடையே முக்கிய பேச்சாக உள்ளதாக கட்சித் தகவல்கள் கூறின.
முழு விவரம் 21.2.2012 தமிழ் முரசில்

sasikala-file
Sunday, February 19th, 2012

அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு எதிரான பெங்களூரு வழக்கு விசாரணையில் நேற்று பெரும் திருப்பம் ஏற்பட்டது.

அதிமுக தலைவியும்  தமிழக முதல்வருமான  செல்வி ஜெயலலிதா ஓர் அப்பாவி என்று சசிகலா சாட்சியம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவும் அவரின் தோழியான சசிகலாவும்  சட்ட விரோதமாக 66 கோடி ரூபாய் சொத்துக்களைக் குவித்ததாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

அந்த வழக்கின் 2வது குற்றவாளியான சசிகலா நேற்று  நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 சசியுடன் இளவரசியும் சுதாகர னும் முன்னிலை ஆனார்கள். வழக்கில் தெரிவிக்கப்படும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கைத் தான் மட்டுமே நிர்வகித்து வந்ததாகவும் நிறுவனத் தில் ஜெயலலிதா வெறும் பங்காளி தான் என்றும் சசிகலா சாட்சியம் அளித்தார்.

“இந்த நிறுவனத்தை நான்தான் நிர்வகித்து வந்தேன். இதில் நடந்தவை  எவையும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது.

“இதில் அவ்வளவாக அவர் நாட்டம் காட்டியதில்லை. இதற்கு நான்தான் முழுப்பொறுப்பாக இருந் தேன். சொத்து வாங்கிய விவரம் அவருக்குத் தெரியாது,” என்று சசிகலா சாட்சியம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி. இரண்டாவது குற்றவாளி சசிகலா. இவர் முதன் முதலாக வாக்குமூலம் அளித்தது நேற்றுதான் என்பது குறிப்பிடத் தக்கது.  சசிகலா மிக நிதானமாக பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு எழுதி வைத்திருந்ததைப் பார்த்து பதில் கூறினார்.
சில கேள்விகள் கேட்டபோது பதில் அளித்த சசிகலா, கண்ணீர் சிந்தி அழுதார்.

jayalalitha
Friday, February 17th, 2012

சட்டத்தை மதிக்கும் மக்களிடம் நண்பனாகவும் வன்முறையாளர்கள் பார்த்து அஞ்சும் வகையிலும்   நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கி உள்ளார்.

மனித நேயத்துடன் கூடிய, மென்மையான அணுகுமுறை பயன்தராத இடத்தில், கடினமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.

சென்னை, ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஜெயலலிதா உரை ஆற்றினார்.

“வன்முறையாளர்கள், கொலை காரர்கள், கொள்ளைக்காரர்கள் ஆகியோர் அஞ்சும் வகையில் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்,” என்று அவர்,  “காவல் துறை பணி சிறப்புடன் விளங்க காவல் துறை நவீனமயமாக்குதல் மிகவும் இன்றியமையாதது,” என்றார்.

முழு விவரம் 17.2.2012 தமிழ்முரசில்

tm logo
Wednesday, February 15th, 2012

சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ரவி பிரான்சிஸ் என்பவர் மீதான ஏற்கனவே விசாரிக்காமல் கிடப்பில் இருந்தது. அந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல இருக்கும் நிலையில், அந்தக் கைதி, “ஏற்கனவே ஆயுள் கைதியாக இருக்கும் என்மீது இன்னொரு வழக்கு விசாரணை வேண்டாம். தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்,” என்று எவ்வளவோ மன்றாடியிருக்கிறார்.

ஆனால் சிறை அதிகாரிகளும் போலிஸ்காரர்களும் அவர் கூறியதைப் பொருட்படுத்தாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். “எவ்வளவோ மன்றாடியும் என்னை விட மறுக்கிறீர்கள். சரி பரவாயில்லை. நான் கோர்ட்டுக்கு வருகிறேன்,” என்று கூறிய அவர், தமது உடைகளைக் களைந்து கோவணத்துடன் காட்சி தந்தார்.

“கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வதில் நீங்கள் பிடிவாதமாக இருந்தால் நான் இப்படித்தான் வருவேன், என்னை அழைத்துச் செல்லுங்கள்,” என்று அதிகாரிகளுக்கு அவர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
இதனையடுத்து சிறையின் மேலதிகாரிகள் ரவியிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் ஆடை அணிந்து நீதிமன்றம் செல்ல ஒப்புக்கொண்டார் ரவி.

tm logo
Wednesday, February 15th, 2012
பங்ளாதேஷை சேர்ந்த “பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ்” என்றழைக்கப் படும் இணையத் கள்வர்கள், குழுவாக செயல்பட்டு இந்தியாவின் 20,000 இணையத் தளங்களில் ஊடுருவி அவற்றை முடங்கச் செய்துள்ளனர். இது தொடர்பாக தங்களது இணையத் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ள அக்குழு பங்ளாதேஷ் எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நியாயமற்ற படுகொலைகளுக்குப் பழிவாங்கும் வகையில் பாதுகாப்புப் படையின் bsf.nic.in இணையத் தளம் உட்பட 20,000 இந்திய இணையத் தளங்களை முடக்கியுள்ளனர்.
இந்தியாவின் பங்கு பரிவர்த் தனை செய்திகளைத் தாங்கி வரும் www.paisacontrol.com என்னும் இணையத் தளத்தையும் இவர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.

stalin-arumugam
Wednesday, February 15th, 2012

சென்னை: திமுகவின் மூத்த தலைவர் வீரபாண்டி ஆறுமுகத் திற்கும் கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கும் இடையே நேரடி மோதல் வெடித்துள்ளதாகவும் வீரபாண்டியை கட்சியை விட்டே நீக்கும்படி திமுக தலைவர் கருணாநிதியை திரு ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாகவும் தமிழக நாளேடுகள் தெரிவிக்கின்றன.

திமுகவின் இளைஞர் அணியைச் சீரமைத்து பலப்படுத்தும் முயற்சியில் திரு ஸ்டாலின் இறங்கியுள்ளார். இளையர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கு வயது வரம்பிற்கான புதிய விதிகளை நடப்புக்குக் கொண்டுவந்ததோடு தானே நேரடியாகச் சென்று கட்சியில் சேர விரும்பும் இளையரை மாவட்டம் வாரியாக நேர்காணல் கண்டு அதன் பின் கட்சியில் சேர்க்க ஒப்புதல் வழங்கும் பணியில் இறங்கியுள்ளார் திரு ஸ்டாலின்.

இதற்காக, ஒவ்வொரு மாவட்டமாகச் சென்றுவரும் திரு ஸ்டாலின், சேலம் மாவட்ட இளைர் அணிக்கு நிர்வாகி களைத் தேர்வு செய்யும்போது வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு பின்னர் இருவரும் நேரடியாகவே மோதிக்கொள்ளும் அளவுக்குப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

முழு விவரம் 15.2.2012 தமிழ் முரசில்

pak minister
Tuesday, February 14th, 2012
ரெய்ச்சூர்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர்ரை கைப்பேசியில் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசியதாக கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைர் ஒருவரை போலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன், அமைச்சர் ஹீனாவின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஆபாச வார்த்தைகளில் உரையாடியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என விசாரிக்கச் சொன்னார். அந்த அழைப்பு இந்தியாவில் இருந்து வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியபோது, ரெய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவைச் சேர்ந்த புட்டினி என்ற சிறிய கிராமத்திலிருந்து அந்த அழைப்பு வந்தது தெரிய வந்தது.

முழு விவரம் 14.2.2012 தமிழ் முரசில்
ketamin
Tuesday, February 14th, 2012

புதுடெல்லி: மலேசியாவுக்கு போதை மருந்து கடத்த முயன்ற இரண்டு பெண் பயணிகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ‘கேட்டமின்’ எனப்படும் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
தேவிகா, ஷமீம் பேகம் என்ற இரண்டு பயணிகளும் டெல்லி அனைத்துலக விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தனர். மலேசியா செல்லும் விமானத்தில் அவர்கள் புறப்படத் தயராக இருந்தபோது,  சந்தேகத்தின் பேரில் அவர்களின் உடைமைகள் சோதிக்கப்பட்டன. அதில், ஆறு கிலோ எடையுள்ள கேட்டமின் என்ற தடை செய்யப்பட்ட போதை மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

முழு விவரம் 14.2.2012 தமிழ் முரசில்

blackmoney
Tuesday, February 14th, 2012
புதுடெல்லி: வெளிநாட்டு வங்கி களில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதில் இந்தியர் களுக்குத்தான் முதலிடம் என சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க அவர்கள் இவ்வாறு செய்வதாகக் கூறிய அவர், சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் (S$630, ரூ. 24.5 லட்சம் கோடி) அளவிற்கு அந்தத் தொகை இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்படும் பணத்தாலும்
இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
அந்த வழிகளில் கிடைக்கும் பணம், மொரிஷியஸ், சுவிட்சர் லாந்து, லிச்டென்ஸ்டைன், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்  பட்டது.

முழு விவரம் 14.2.2012 தமிழ் முரசில்
Syndicate content