fontsize: 60% 70% 80% 90%

தலையங்கம் (செவ்வாய் தோறும்)

ஐரோப்பாவில் கால் பதிக்கவேண்டும் காற்பந்து நட்சத்திரம் ஹரிஸ் ஹருன்

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் இளம் வீரர் ஹரிஸ் ஹருன்(19) அண்மையில் சீனாவின் முன்னணி காற்பந்துக் குழுவான ஷங்காய் ஷென்ஹுவாவுடன் பத்து நாள் பயிற்சி மேற்கொண்டு திரும்பினார்.

ஷங்காய் ஷெங்ஹுவாவின் அழைப்புக்காகக் காத்திருக்கும் ஹரிஸ், காற்பந்தில் சாதிக்க விரும்பினால் அவர் இவ்வட்டாரத்தை விட்டு வெளியில் கால் பதிக்கவேண்டும்.

சீனாவின் காற்பந்தாட்டப் பயிற்சி முறைகளிலோ அதன் ஆட்டத்திலோ குறைகள் இல்லை, ஆனால் அவ்வளவு பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சீனா இதுவரை ஒரு முறைதான் உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது (2002ல்). இதுவரை ஆசிய கிண்ணத்தையும் சீனா வென்றதில்லை.

எனவே ஐரோப்பிய நாடுகளின் லீக் போட்டிகளில் விளையாடுவது ஹரிஸிற்கு அதிக அனுபவத்தைத் தரும்.

இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஹாலந்து, ஜெர்மன¬, பிரான்ஸ், போர்ச்சுகல் போன்ற நாடுகளின் காற்பந்து லீக் தொடர்கள் பிரபலமானவை.

இந்நாடுகளின் முதல் நிலை லீக்கில் இடம்பெறவில்லை என்றாலும் அந்நாடுகளின் இரண்டாம் நிலை லீக் குழுக்களில் பெறும் அனுபவமே இன்றியமையாதது. இத்தகைய குழுக்களில் விளையாடினால் முதல் நிலை குழுக்களின் பார்வையில் படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஐரோப்பிய லீக் போட்டிகளில் முஸ்லிம்கள் உட்பட பல நாட்டு விளையாட்டாளர்கள் விளையாடுகின்றனர்.

சீனாவில் பயிற்சி மேற்கொண்ட போது ‘ஹலால்’ உணவு கிடைப்பது, மொழியும் பெரும் பிரச்சினையாக இருந்தது என ஹரிஸ் கூறியிருந்தார்.

ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, துருக்கி போன்ற நாடுகளில் உணவுப் பிரச்சினை இருக்காது.

சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து நட்சத்திரங்களான ஃபாண்டி அகமது, வி. சுந்தரமூர்த்தி போன்றோரும் தங்கள் இளமைப் பருவங்களில் ஐரோப்பியக் குழுக்களில் சில காலம் விளையாடியது நினைவிருக்கலாம்.

மொழி, பருவநிலை மாற்றங்கள் போன்றவை பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் இந்தச் சிரமங்களை எதிர்நோக்கி வெற்றி பெற்றால் ஹரிஸின் காற்பந்துத் திறன்களும் உடல், மன உறுதியும் புதிய பரிமாணத்தைப் பெறும் என்பது திண்ணம்.
முன்னணி ஐரோப்பியக் குழுக்களில் விளையாடினால் அது சிறுபான்மையினரான ஹரிஸின் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும். அத்துடன் ஹரிஸின் வாழ்க்கைத் தரமும் உயரும். அவரது காற்பந்துத் திறன்களும் மேலும் கூர்மை அடையும்.

எதிர்பாராத உலகக் கிண்ண அதிரடிகள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் காற்பந்து ரசிகர்களை மயக்கும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகள் இம்முறையும் அதிர்ச்சி தரும் முடிவுகளையும் சம்பவங்களையும் தந்துள்ளது.

உலகக் கிண்ண இறுதிச் சுற்று தொடங்குவதற்கு முன்னரே, அதிகாரத்துவ காற்பந்தான ‘ஜபுலானி’ தங்கள் திறன்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று ஆட்டக்காரர்களும் நாடுகளும் எதிர்ப்புக் குரல் எழுப்பின. ஆனால், அனைத் துலக காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) அதைக் கண்டு கொள்ளவில்லை.

ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள காற்பந்து ஜாம்பவான் பிரேசில் கால் இறுதி ஆட்டத்தில் தோற்றது.
நான்கு முறை வென்றுள்ள இத்தாலி, பிரிவுச் சுற்றிலேயே மண்ணைக் கவ்வியது. இரு முறை கிண்ணத்தை வென்றுள்ள அர்ஜெண்டினா கால் இறுதிச் சுற்றில் தோல்வி கண்டு வீடு திரும்பியது.

1998ம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்றதும் கடந்த உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற நாடுமான பிரான்ஸ் பிரிவுச் சுற்றிலேயே எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்தது.

அதற்கு அதன் பயிற்றுவிப்பா ளரின் உத்திகள்தான் காரணம் என்று ஆட்டக்காரர் நிக்கலஸ் அனெல்கா அவரிடம் வாதிட, பயிற்றுவிப்பாளரோ அவரைக் குழுவிலிருந்து நீக்கினார்.

அதை எதிர்த்து கேப்டன் பெட்ரிஸ் எவ்ரா தலைமையில் ஆட்டக்காரர்கள் அனைவரும் பயிற்சியைப் புறக்கணித்தது, பிரச்சினையைப் பூதாகர மாக்கியது.

பிரச்சினையைச் சரி செய்ய பிரஞ்சு அதிபர் சர்கோஸி, தன் விளையாட்டு அமைச்சரைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப, ஃபிஃபா அது தனது விதிகளுக்குப் புறம்பானது என்று கண்டனக் குரல் எழுப்பியது.

அதேபோல், ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமான நைஜீரியாவினாலும் பிரிவுச் சுற்றைக் கடந்து செல்ல முடியவில்லை. நாடு திரும்பிய நைஜீரிய காற்பந்துக் குழுவுக்கு இரு ஆண்டுகளுக்குத் தடை விதித்தார் அந்நாட்டு அதிபர்.
அதற்கும் ஃபிஃபா கடும் கண்டனம் தெரிவித்தது. பின்னர் நைஜீரிய அதிபர் தடையை அகற்றினார்.

இரண்டாம் சுற்றுக்குச் சென்று கடும் போராட்டத்துக்குப் பிறகு தோல்வி கண்ட தென் கொரியா மற்றும் ஜப்பான், பிரேசிலையும் திக்குமுக்காட வைத்த வட கொரியா ஆகியவை ஆசியா வுக்குப் பெருமை சேர்த்தன.

சிங்கப்பூரர்களின் வலுவான முதலீடு

பணம், வாழ்க்கை வசதிகளுக்கே சிங்கப்பூரர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது பொதுவாக நிலவும் கருத்து.
ஆனால் குடும்பத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என அதிகமான சிங்கப்பூரர்கள் கருதுகின்றனர் என்பதை தேசிய குடும்ப மன்றம் அண்மையில் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த ஆய்வை வெளியிட்டுப் பேசிய பிரதமர் லீ, வலுவான குடும்பங்களே சிங்கப்பூர் சமூகத்தின் அடித்தளம் என்று குறிப்பிட்டார்.

அன்பு, அக்கறை, பரிவு, பரஸ்பர மரியாதை, பெற்றோர் பாசம், கடப்பாடு, கலந்து உறவாடுதல் ஆகிய குடும்ப நியதிகள் மிகவும் முக்கியம் என்று 87 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

பெற்றோரிடையே பாசத்தைக் காட்டுவது, குடும்ப உறுப்பினருடன் அதிக நேரம் செலவழிப்பது, கலந்துறவாடுவது ஆகியவையும் சிங்கப்பூரர்களிடையே முக்கியத் தன்மைகளாகத் திகழ்கின்றன.

வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுவது சரியல்ல என 87 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
மூப்படைந்து வரும் சிங்கப்பூர் சமூகத்தில் இத்தகைய மனப்போக்கை அதிகமான சிங்கப்பூரர்கள் கொண்டிருப்பது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

அதேநேரத்தில் முதியவர்களும் புரிந்துணர்வு மிக்கவர்களாக உள்ளனர். 60 வயதைக் கடந்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் தன¬யாக சொந்த வ~ட்டில் வாழ்வதையே விரும்புகிறார்கள். பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள்.

இந்தியர்கள் பொதுவாகவே குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிக்க விரும்புவதும், பிள்ளைகளுக்கு சுமையாக இருக்கக்கூடாது எனக் கருதுபவர்களும் அதிகம்.

எண்ணமும் மனப்போக்கும் வலுவாக இருந்தாலும் அவ்வப்போது பிரச்சினைகளும் நெருக்கடிகளும் நிலவும். குடும்ப உறவுகளில் எப்போதுமே சிரிப்பும் மகிழ்ச்சியும் சூழ்ந்திருக்க முடியாது.

பல தலைமுறையினர் ஒன்றாக வாழ்வது அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் பிரதமர் லீ சுட்டியுள்ளார்.
பிரச்சினைகள் ஏற்படும்போது, குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெற்றோர்- பிள்ளைகள், ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் பாசப் பிணைப்பை வேரறுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரர்களின் வலுவான முதலீடு

பணம், வாழ்க்கை வசதிகளுக்கே சிங்கப்பூரர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது பொதுவாக நிலவும் கருத்து.
ஆனால் குடும்பத்தில் முதலீடு செய்வதே சிறந்தது என அதிகமான சிங்கப்பூரர்கள் கருதுகின்றனர் என்பதை தேசிய குடும்ப மன்றம் அண்மையில் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த ஆய்வை வெளியிட்டுப் பேசிய பிரதமர் லீ, வலுவான குடும்பங்களே சிங்கப்பூர் சமூகத்தின் அடித்தளம் என்று குறிப்பிட்டார்.

அன்பு, அக்கறை, பரிவு, பரஸ்பர மரியாதை, பெற்றோர் பாசம், கடப்பாடு, கலந்து உறவாடுதல் ஆகிய குடும்ப நியதிகள் மிகவும் முக்கியம் என்று 87 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

பெற்றோரிடையே பாசத்தைக் காட்டுவது, குடும்ப உறுப்பினருடன் அதிக நேரம் செலவழிப்பது, கலந்துறவாடுவது ஆகியவையும் சிங்கப்பூரர்களிடையே முக்கியத் தன்மைகளாகத் திகழ்கின்றன.

வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுவது சரியல்ல என 87 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
மூப்படைந்து வரும் சிங்கப்பூர் சமூகத்தில் இத்தகைய மனப்போக்கை அதிகமான சிங்கப்பூரர்கள் கொண்டிருப்பது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

அதேநேரத்தில் முதியவர்களும் புரிந்துணர்வு மிக்கவர்களாக உள்ளனர். 60 வயதைக் கடந்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் தன¬யாக சொந்த வ~ட்டில் வாழ்வதையே விரும்புகிறார்கள். பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள்.

இந்தியர்கள் பொதுவாகவே குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிக்க விரும்புவதும், பிள்ளைகளுக்கு சுமையாக இருக்கக்கூடாது எனக் கருதுபவர்களும் அதிகம்.

எண்ணமும் மனப்போக்கும் வலுவாக இருந்தாலும் அவ்வப்போது பிரச்சினைகளும் நெருக்கடிகளும் நிலவும். குடும்ப உறவுகளில் எப்போதுமே சிரிப்பும் மகிழ்ச்சியும் சூழ்ந்திருக்க முடியாது.

பல தலைமுறையினர் ஒன்றாக வாழ்வது அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் பிரதமர் லீ சுட்டியுள்ளார்.
பிரச்சினைகள் ஏற்படும்போது, குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெற்றோர்- பிள்ளைகள், ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் பாசப் பிணைப்பை வேரறுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களுக்கும் பொறுப்புண்டு

வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகளை நிர்வகிக்கும் நகர மன்றங்களில் நிர்வாகம் குறித்து முதல் முறையாக மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுத்தம், பராமரிப்பு, மின்தூக்கி செயல்பாடு, பராமரிப்புக் கட்டண பாக்கி அளவு ஆகிய அடிப்படைகளில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மொத்தம் உள்ள 16 நகர மன்றங்களில் 14 மன்றங்கள் மக்கள் செயல் கட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றன.
பொத்தோங் பாசிர், ஹவ்காங் ஆகிய இரு நகர மன்றங்களை எதிர்க்கட்சிகள் நிர்வகிக்கின்றன.
இந்த நகர மன்றங்கள் மொத்தமாக ஏறக்குறைய 900,000 அடுக்குமாடிகளைப் பராமரிக்கின்றன.
பராமரிப்புக் கட்டணங்களை மூன்று மாதங்களுக்கு மேல் வசூலிக்காததால் ஹவ்காங்கும் பொத்தோங் பாசிரும் ஆக மோசமான மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன.
அதைத் தவிர்த்து மற்றப் பிரிவுகளில் இவற்றுக்கும் மற்றவற்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
எனினும் இந்த மதிப்பீட்டு அறிக்கை “நியாயமற்றது” என்றும் “முரண்பாடானது” என்றும் இரு தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த தேசிய வளர்ச்சி அமைச்சின் மூத்த துணை அமைச்சர் கிரேஸ் ஃபூ, நகர மன்ற நிர்வாக அறிக்கையின் மதிப்பீட்டு முறை நியாயமாகவும் பாரபட்சமின்றியும் மேற்கொள்ளப் பட்டதாகக் கூறியுள்ளார்.
பேட்டைகளை மேம்படுத்த தங்களுக்கு நிதி கிடைப்பதில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ள அவர், “நடைமுறை நிதி, மானியம் அனைத்தும் சமம்” எனக் கூறியுள்ளார்.
மதிப்பீட்டைச் செய்த தேசிய வளர்ச்சி அமைச்சு, இந்த மதிப்பீடு வீவக பேட்டைகளை ஒப்பிடுவதற்கானதல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு பேட்டையும் தனித்தன்மையானது.
அடுக்குமாடிகளும் குடியிருப்பாளர் அளவும் இடத்துக்கு இடம் வேறுபடும்.
சில பேட்டைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வீடுகளை அதிகமாகக் கொண்டிருக்கும். சிலவற்றில் பெரிய வீடுகள் அதிகமாக இருக்கும்.
இவற்றை புதிய வீடுகளைக் கொண்ட பேட்டைகளுடன் ஒப்பிடுவது சரியாகாது.
குடியிருப்பாளர்கள் தங்களது குடியிருப்புப் பகுதியை மேம்படுத்தவும் பராமரிக்கவும் நகரமன்றங்களுடன் இணைந்து செயல்பட இந்த மதிப்பீடு உதவியாக அமையும்.

உலகக் கிண்ணக் காற்பந்தில் சிங்கப்பூர்

சிங்கப்பூர் காற்பந்து உன்னத நிலையை எட்டிட ‘2010ம் ஆண்டின் இலக்கு: உலகக் கிண்ணக் காற்பந்தில் சிங்கப்பூர்’ என்ற வாசகத்தை 2004ம் ஆண்டில் சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் 22ம் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர்
மா போ டான் முன்மொழிந்தார்.
இந்த இலக்கு சிங்கப்பூர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளையாடுவது பற்றி மட்டுமல்ல.
அதற்கும் மேலாக, காற்பந்தில் சிங்கப்பூர் உன்னத நிலையை எட்ட நமது காற்பந்துத் திறனை செம்மைப்படுத்தி, முழு மூச்சுடன் செயல்படவும் அதில் ஒருக்கால் வெற்றி பெறாவிட்டால் அதற்கென மனம் தளராமல் இருப்பதுமே ஆகும்.

டாக்டர் கோ சிங்கப்பூரின் விலைமதிப்பற்ற சொத்து

நவீன சிங்கப்பூரைக் கட்டி எழுப்பிய தனிச்சிறப்பு மிக்க தலைவர்களில் ஒருவரான டாக்டர் கோ கெங் சுவீயை நாடு அரச மரியாதையுடன் வழியனுப்பி வைத்தது.

அந்த மாமனிதரைப் போலவே எளிமையாகவும் அர்த்தம் மிகுந்ததாகவும் நடந்த அவரது இறுதிச் சடங்கில் பேசிய ஐவரும் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள்.

டாக்டர் கோவின் அரசியல் சகாவாகவும் நெருங்கிய நண்பருமான மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ, “சிங்கப்பூர் அடைந்த சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் தமது அமைச்சரவை சகாக்களிலேயே அதிக பங்காற்றியவர் டாக்டர் கோ,” என்று வர்ணித்தார்.

மனநிறைவளித்த தாய்மொழிக் கல்வி விவகாரம்

பிஎஸ்எல்இ எனும் தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வில் தாய் மொழி மதிப்பீடு குறைக்கப்படாது. அதில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், தாய்மொழி கற்பித்தல் முறையிலும் தாய்மொழி தேர்வு முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும் எனும் செய்தி அனைத்து தரப்பினருக்கும் மனநிறைவை அளித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் கல்வி அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், தேர்வு முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவது குறித்து தமது அமைச்சு பரிசீலித்து வருகிறது என்று கூறினார்.

அதை சிங்கப்பூர் மக்கள் தாய்மொழி மதிப்பீட்டைக் குறைக்க அமைச்சு பரிசீலிக்கிறது என்று எண்ணிவிட்டார்கள்.

தாய்மொழிக் கல்வி முக்கியமானது

சிங்கப்பூரின் கல்வித் திட்டத்தில் தாய்மொழிக் கல்வி தொடர்ந்து முக்கிய இடத்தை வகிக்கும் என்பதை பிரதமர் லீ சியன் லூங் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வில் தாய்மொழி பாடத்தின் மதிப்பீட்டு விழுக்காட்டைக் குறைப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் கூறியதை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் தமிழ் மொழி உட்பட, கல்வித் திட்டத்தில் தாய்மொழிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

முத்தரப்பும் ஒத்துழைப்போம்

முதலாளிகள் செலுத்தும் மத்திய சேமநிதி (மசேநிதி) சந்தா விகிதம் 1% உயர்த்தப்பட்டு
15.5 விழுக்காடாக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் மே தினப் பேரணியில் தெரிவித்த செய்தி ஊழியர்கள் அனைவருக்கும் ஓர் இனிப்பான செய்தியாக அமைந்தது.
முதல் காலாண்டின் வலுவான 13% பொருளியல் வளர்ச்சியால், ஊழியர்களுக்கு முதலாளிகள் செலுத்தும் மசேநிதிச் சந்தா விகிதத்தில் ஒரு பகுதியை உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்ததற்கு ஏற்ப, அரசு ஒரு விழுக்காட்டு உயர்வை அறிவித்தது.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838