Tamilmurasu த‌மிழ் முர‌சு http://tamilmurasu.com.sg ta “தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் அழியவில்லை” http://tamilmurasu.com.sg/node/7222
கொழும்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் அழியவில்லை.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புலிகள் அமைப்பு அழியாமல் பாதுகாத்து வருவதாக இலங்கை அதிபர் கூறியிருக்கிறார்.
“எல்லாம் இன்னும் முடிந்துவிடவில்லை. செயல்படா உறுப்பினர்களும் ஆர்வமுள்ள தரப்பினரும் இன்னும் இருக்கிறார்கள், குறிப்பாக இலங்கைக்கு வெளியில்” என்று திரு மகிந்த ராஜபக்சே கூறினார்.
வெளிநாட்டுத் தமிழர்கள் சிலர் ஈழத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் சொன்னார்.

மேலும்
முக‌ப்பு Thu, 18 Mar 2010 03:58:27 +0000 tamilmurasuweb 7222 at http://tamilmurasu.com.sg வெளிநாட்டு ஊழியரை மிரட்டிய பேருந்து பயணி http://tamilmurasu.com.sg/node/7221
பேருந்து சேவை ஒன்றில் இந்திய ஆடவர் ஒருவர் உரக்க சத்தமிட்ட வீடியோ படம் யூடியுப் மற்றும் ஃபேஸ்புக் சமூக கட்டமைப்பு இணைய தளங்களில் உலா வருகிறது.
பின் கதவுகள் அருகில் அமர்ந்திருந்த அந்த இந்திய ஆடவர், தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பதை போல் காணப்பட்டார்.
தான் சிங்கப்பூரர் என்று சத்தமாக சொல்லி கொண்ட அவர், இந்தியாவில் இருந்து வந்தவர்களைப் பற்றி கோபமாக ஆங்கிலத்தில் பேசி கொண்டிருந்தார்.
இந்தியாவில் இருந்து குடியேறிவர்கள் இந்தியாவுக்கே திரும்ப வேண்டும் என்று கோபமாக பேசினார் அந்த ஆடவர்.
“நான் அமைச்சராக இருந்தால் இந்தியர்களை விரட்டி விடுவேன்,” என்று ஒரு கட்டத்தில் கத்தினார்.

மேலும்
முக‌ப்பு Thu, 18 Mar 2010 03:57:55 +0000 tamilmurasuweb 7221 at http://tamilmurasu.com.sg நீதிக்கு புறம்பாக நடந்த முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு http://tamilmurasu.com.sg/node/7220
போக்குவரத்து சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்ற ஒருவரை அக்குற்றச் சாட்டில் இருந்து தப்ப வைக்க, தோழி ஒருவரை அக்குற்றத்தை ஏற்க வைத்ததை முன்னாள் போலிஸ் அதிகாரி ஒருவர் கீழ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தற்போது சொத்து ஆலொசகராகப் பணிபுரியும் கெல்வின் சூ யூ பெங் (39), இவென்ஜலின் டே சூ ஆனை (21) போக்குவரத்துக் குற்றச்சாட்டில் இருந்து தப்ப வைக்க நீதிக்கு புறமாகச் செயல்பட்டார்..
சூ சென்ற 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டேயின் குற்றச்சாட்டை எற்க லியோங் மன் குவான் (34) என்ற மாதை ஏற்பாடு செய்தார்.
முன்னாள் துணை போலிஸ் சுப்ரின்டென்டனாக பணியாற்றிய சூ அதற்காக லியோங்கிற்கு $1,000 கொடுத்தார்.

மேலும்
சிங்கப்பூர் Thu, 18 Mar 2010 03:54:48 +0000 tamilmurasuweb 7220 at http://tamilmurasu.com.sg வேக வளர்ச்சி காணும் உயிரியல்மருத்துவத் துறை http://tamilmurasu.com.sg/node/7219
சிங்கப்பூரின் உயிரியல்மருத்துவ அறிவியல் துறை இந்த ஆண்டில் 5 முதல் 10 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 13,000 ஊழியர்களைக் கொண்டிருக்கும் இத்துறை மேலும் வளரும் என பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆண்டு இறுதி ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
கடந்த 2008ல் $20.2 பில்லியனாக இருந்த இத்துறையின் உற்பத்தி 2015ம் ஆண்டு வாக்கில் $25 பில்லியனை எட்டும் என கழகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
2009ம் ஆண்டில் உயிரியல் மருத்துவ அறிவியல் துறை $1.2 பில்லியன் மொத்த சொத்து முதலீட்டையும் $700 மில்லியன் மொத்த வர்த்தக செலவையும் ஈர்த்ததாக அறிக்கை தெரிவித்தது.

மேலும்
சிங்கப்பூர் Thu, 18 Mar 2010 03:54:13 +0000 tamilmurasuweb 7219 at http://tamilmurasu.com.sg பிப்ரவரி ஏற்றுமதி உயர்ந்தது http://tamilmurasu.com.sg/node/7218
மின்னியல், மருந்துத் துறைகளின் ஏற்றுமதி அதிகரிப்பினால், சிங்கப்பூரின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் வேக வளர்ச்சி கண்டது.
எண்ணெய் சாராத பொருட்களின் ஏற்றுமதி ஔராண்டு காலத்துடன் ஒப்பிட 23 விழுக்காடு உயர்ந்தது.
ஔராண்டுக்கு முன்னர் ஒப்பிட, மின்னியல் பொருட்களின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் 26 விழுக்காடு கூடி, $4.38 பில்லியன் ஆனது. அதற்கு முந்திய மாதத்தில் 22.7% உயர்ந்தது.
பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உட்பட மின்னியல் துறை சாராத பொருட்களின் ஏற்றுமதி, பிப்ரவரியில் 22% கூடியது. ஜனவரியில் குறைந்திருந்த மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி, பிப்ரவரியில் 29% உயர்ந்தது.
சிங்கப்பூர் Thu, 18 Mar 2010 03:53:39 +0000 tamilmurasuweb 7218 at http://tamilmurasu.com.sg மாற்றான் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு http://tamilmurasu.com.sg/node/7217
பதின்ம வயது மகளை மானபங்கம் செய்து, பாலியல் உறவு கொண்ட மாற்றன் தந்தை மீது நேற்று கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பாதுகாப்பு மேற்பார்வை யாளராக வேலை செய்து வந்த அந்த 41 வயது ஆடவர் 2007ம் ஆண்டு பதின்ம வயது பெண்ணை முதன்முதலில் மானபங்கம் செய்தார். அப்போது சிறுமிக்கு வயது 12.
அதற்கு பிறகு ஆடவர் சிறுமியை வடக்கு வட்டாரத்தில் உள்ள அவர்களது வ~ட்டில் மேலும் மூன்று முறை மானபங்கம் செய்தார் என்றும் நீதிமன்றம் அறிந்தது.
ஆடவர் மீது சுமத்தப் பட்டிருக்கும் பாலியல் உறவு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் Thu, 18 Mar 2010 03:53:23 +0000 tamilmurasuweb 7217 at http://tamilmurasu.com.sg பொங்கோல் விபத்தில் ஊழியர் மரணம் http://tamilmurasu.com.sg/node/7216
பொங்கோல் வீவக கட்டுமானத் தளத்தில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில் ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார். பாரந்தூக்கி சாய்ந்ததில் அவர் உயிரிழந்ததாக குடிமைத் தற்காப்புப் படையின் அறிக்கை குறிப்பிட்டது.
அவருக்கு அருகில் நின்ற இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். ஒருவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. மற்றவருக்கு இடது இடுப்பில் வலி இருப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் சாங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 5.24 மணிக்கு விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதிகாரிகள் 5.32க்கு அவ்விடத்துக்கு விரைந்தனர்.
சிங்கப்பூர் Thu, 18 Mar 2010 03:51:31 +0000 tamilmurasuweb 7216 at http://tamilmurasu.com.sg சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் ஐம்பெரும் பூதங்களின் தாண்டவம் http://tamilmurasu.com.sg/node/7215
இந்து சமயத் தத்துவத்தின் அடிப்படையில், சுற்றுச் சூழலைக் காக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது பாஸ்கர் கலைக்கழகம் வழங்கும் ‘தாண்டவம்’.
தாண்டவம் என்பது ஆக்கமும் அழித்தலும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் விறுவிறுப்பும் வேகமும் கொண்ட நடனம்.
முத்துசுவாமி தீட்சிதரின் பஞ்ச பூத லிங்கக் கிருதிகளை உந்துசக்தியாகக்கொண்டு இந்தியாவைச் சேர்ந்த பி.டி நரேந்திரன் நடனத்தை வடிவமைத்திருக்கிறார்.
ஐம்பெரும் பூதங்களின் இயல்புகளையும், அவை மனிதப் பண்புகளோடு பின்னிப் பிணைந்திருப்பதையும், இந்த முறையில் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவையும் நாட்டியம் வழி சித்தரித்துள்ளார்,
பி.டி. நரேந்திரன்.

மேலும்
சிங்கப்பூர் Thu, 18 Mar 2010 03:48:17 +0000 tamilmurasuweb 7215 at http://tamilmurasu.com.sg பொன்சேகா விசாரணை ஒரே ரகசியம் http://tamilmurasu.com.sg/node/7214
இலங்கையின் முன்னாள் ராணுவத் தலைவர் சரத் பொன்சேகா, ஒரு ராணுவ நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
ராணுவச் சீருடையில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டதாகக் கூறும் குற்றச் சாட்டுகளின் பேரில் அவர் ஆஜரானார்.
விசாரணை, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முந்திய நாளான ஏப்ரல் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
என்றாலும் சரத் பொன்சேகா, ராணுவக் கொள்முதல் நடைமுறைகளை மீறியதாகக் கூறும் குற்றச் சாட்டுகளின் பேரில் இன்று ராணுவ நீதிமன்றத்தில் ஆஜராவார்.

மேலும்
உலகம் Wed, 17 Mar 2010 02:26:50 +0000 tamilmurasuweb 7214 at http://tamilmurasu.com.sg சென்னைக்கு சில்க் ஏர் http://tamilmurasu.com.sg/node/7213 சென்னைக்கும் பெங்களூருவுக்கும் செல்லும் விமான நிறுவனங்களின் பட்டியலில் வரும் ஜூன் மாதம் முதல் சில்க் ஏர் நிறுவனமும் சேரவுள்ளது.சென்னை, பெங்களூரு என்று இரு நகரங்களில் வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதால் இந்த இடங்களுக்குச் சில்க் ஏர் விரைவில் சே£வையைத் தொடங்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சில்க் ஏர் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.தமிழ்நாட்டின் தலைநகரமாகத் திகழும் சென்னைக்கு வாரத்தில் ஏழு நாட்களுக்கும் எதிர்வரும் ஜூன் 14ம் தேதி முதல் சில்க் ஏர் செல்லவிருக்கிறது.கர்நாட்டக்காவில் உள்ள பெங்களூருவுக்கு மே 17ம் தேதி முதல
மேலும்
உலகம் Wed, 17 Mar 2010 02:26:11 +0000 tamilmurasuweb 7213 at http://tamilmurasu.com.sg