செய்தி

Nov 15, 2010
Monday, November 15th, 2010

சென்னை கொசுத் தொல்லை பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கொசுக்கடி சிறு பிரச்சினையாகத் தோன்றினாலும் அவற்றின் மூலம் மலேரியா காய்ச்சல், டெங்கிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
சென்னை என்றதும் அங் குள்ள கொசுத் தொல்லையும் பெரிய குறையாகப் பேசப்பட்டு வருவதால், இந்தக் குறையை நிவர்த்தி செய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.
தெருக்களில் நாள் தோறும் கொசு ஒழிப்புப் புகை அடித்தல், நீர் நிலைகளில் மருந்து தெளித் தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

Monday, November 15th, 2010

சிங்கப்பூர் இந்த ஆண்டு அனுபவித்த 13 முதல் 15 விழுக் காட்டுப் பொருளியல் வளர்ச்சியைப் போல அடுத்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடுப்பகுதியில் மூன்றில் இருந்து ஐந்து விழுக் காட்டு வளர்ச்சியையே சிங்கப்பூர் பெற இயலும் என்றும் அவர் கூறினார்.
2010ம் ஆண்டு முழுமைக்கும் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, 13லிருந்து 15 விழுக்காடு வரை இருக்கும் என்றும் கூறினார்.
யோகோஹாமா நகரில் நடைபெற்ற இரு நாள் ஏபெக் கூட்டத்தின் முடிவில் பிரதமர் லீ, சிங்கப்பூர் செய்தியாளர்களி டம் பேசினார்.

Sunday, November 14th, 2010

யோக்கோஹாமா சீனாவுடனும் ரஷ்யாவுடனும் ஜப்பானுக்கு இருக்கும் வட்டார எல்லைப் பூசலில் அமெரிக்கா அளிக்கும் ஆதரவுக்காக ஜப்பானியப் பிரதமர் நாவ்டோ கான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சனிக்கிழமை நன்றி கூறினார்.
அதோடு, அமெரிக்கா தளம் வகிப்பது ஆசியாவுக்கு அத்தியாவ சியம் என்றும் அவர் கூறினார்.
“சீனா, ரஷ்யா ஆகியவை தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு அவரிடம் நன்றி கூறினேன்” என்று திரு கான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டின் போது திரு ஒபாமாவைச் சந்தித்த பிறகு திரு கான் செய்தியாளர் களிடம் பேசினார்.

Sunday, November 14th, 2010

 இந்தியாவின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா மீதான ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான சர்ச்சை ஏற்கனவே பெரிதாகியுள்ள நிலையில் பிரத மருக்கும், அமைச்சர் ராஜாவுக்கும் இடையிலான கடிதப் போக்கு வரத்து குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வேளை யில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் மாத்தூர் என்பவரும் ராஜா மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி சிஎன்என்-ஐபிஎன் தொலைக் காட்சி செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்பெக்ரம் ஏலம் தொடர்பாக 2.11.2007ம் தேதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அமைச்சர் ராஜாவுக்கும் சில கடிதப்போக்குவரத்துகள் இடம் பெற்றுள்ளன.

Monday, November 8th, 2010

தொடர்ந்து சீற்றம் கொண்டு புகையையும் சாம்பலையும் கக்கி வரும் மெராபி எரிமலை காரணமாக சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியா தலைநகர் ஜகார்த்தாவுக்குச் செல்லும் விமானச் சேவைகள் சனிக் கிழமை நிறுத்தப்பட்டிருந்தன.
நிலைமை ஓரளவு சீரடைந்ததைத் தொடர்ந்து நேற்று காலையில் ஏர் ஆசியா விமானங்கள் தங்களது சேவையைத் துவக்கின.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் மாற்றி அமைக்கப்பட்ட நேரத்தில் ஜகார்த்தா கிளம்பிச் சென்றன.
இருப்பினும் நேற்று காலை 10 மணி நிலவரப்படி இதர விமான நிறுவனங்கள் ஜகார்த்தாவுக்கான தங்களது சேவையை நிறுத்தி வைத்திருந்தன.

Syndicate content