செய்தி

Thursday, November 10th, 2011
மக்கள் செயல் கட்சியின் மத்திய நிர்வாக் குழு நேற்று கூடியது. இக்கூட்டத்தில், காலியாகவுள்ள உறுப்பினர் பொறுப்புக்கு புதிதாக ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். சான் சுன் சிங், கிரேஸ் ஃபூ ஹாய் இயென், ஹெங் சுவீ கியாட், டெனிஸ் புவா வே பெங், சீயா கியான் பெங், டான் சுவான் ஜின் ஆகியோரே அந்த அறுவர். மசெகவின் கிளைத் தலைவர்கள், கிளைக் குழுவினர், மாவட்டக் குழுக்கள், மகளிர் பிரிவு, இளையர் பிரிவு ஆகியோர் வாக்கெடுப்பு மூலம் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர். மூத்தோர், இளையோர் சரிவிகிதமாக அமையும் வகையில் புதியவர்களின் நியமனம் இடம் பெற்றுள்ளதாக மசெக தலைமைச் செயலாளர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
Thursday, November 10th, 2011
வாகனமோட்டிகள் அவர்களது வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு ரயிலில் பயணம் செய்ய ஏதுவாக நிலப் போக்குவரத்து ஆணையம் சில முக்கிய ஏற்பாடு களைச் செய்துள்ளது. வட்ட ரயில் பாதையில் உள்ள எல்லா நிலையங்களும் பயணி களுக்குச் சேவை ஆற்ற தொடங்கி விட்டதால் இந்த நிலையங்கள் அருகே கூடுதல் வாகன நிறுத்தும் இடங்களை எல்டிஏ அமைத்து உள்ளது. தற்போது எட்டு வட்ட ரயில் பாதை நிலையங்களுக்கு அருகே வாகனங்களை நிறுத்தி வைத்து ரயிலில் பயணம் செய்யும் திட்டத் தின் கீழ் செயல்படும் வாகன நிறுத்தங்கள் உள்ளதாக எல்டிஏ தெரிவித்தது.
Thursday, November 10th, 2011
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரபரப்பை ஏற்படுத்திய பிலிப்பீன்ஸ் பெண் கொலை வழக்கு விசாரணை நேற்றும் தொடர்ந்தது. குற்றம் சுமத்தப்பட்ட பிஜுகுமார் ரெமாதேவி நாயர் கோபிநாதனின் மரபணுக்கள் சம்பவம் நிகழ்ந்த அறையில் ஒன்பது பகுதிகளில் காணப்பட்டதாக நேற்று நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டது. மார்க்கச்சை, ஒரு ஜோடி காற் சட்டை, பழுப்பு நிற பணப்பையின் உட்புறம் உள்ளிட்ட பகுதிகள் அவை என்று தடயவியல் அதிகாரி திருவாட்டி கீ கோ கெங் தமது சாட்சியத்தில் தெரிவித்தார். அலங்கார மேசையில் கிடந்த மறைமுக சுகாதாரத் துணியில் கோபிநாதனின் ரத்தம் காணப் பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. சுகாதார அறிவியல் ஆணை யத்தைச
Thursday, November 10th, 2011
ரோம்: இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, புதிய வரவு செலவுத் திட்டத்துக்கு நாடாளு மன்றத்தில் ஒப்புதல் கிடைத்த பிறகு பதவி விலகி விடுவேன் என்று அறிவித்துள்ளார். “ஐரோப்பிய அமைப்புகள் மாற்றம் செய்யக் கோரும் நிதிச் சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு பதவி விலகுவேன்,” என்று தொலைக்காட்சி ஒளிவழிக்கு அளித்த பேட்டியில் பெர்லுஸ்கோனி தெரிவித்தார். “இத்தாலி அதன் நிதி விவகாரங்களை சீர்திருத்த விரும்பு கிறது என்பதை அனைத்துலக நிதிச் சந்தைகளுக்கு காட்டுவதே தற்போது முக்கியமான வேலை,” என்றார் அவர். “அரசாங்கத்துக்கு யார் தலைமை வகிப்பது உள்ளிட்ட மற்ற விவகாரங்கள் தற்போது முக்கிய மல்ல.
Thursday, November 10th, 2011
தினமணியில் கடந்த நவம்பர் 4ம் தேதி எழுதப்பட்ட தலையங்கத்தைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அந்நாளேட்டின் ஆசிரியர் மீது வழக்கு ஒன்றை நேற்று முன் தினம் தாக்கல் செய்தார். “அண்ணா நூற்றாண்டு நூல கம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வர் ëஜயலலிதாவுக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக் காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ëஜயலலிதா ஆட்சிக்கு வந்து புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் இந்த நூலகம் கட்டப்படவில்லை,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thursday, November 10th, 2011
இவ்வாண்டின் மூன்றாம் கால் ஆண்டில் ஆயுள் காப்புறுதிக்கான விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வங்கிகளால் விற்கப்படும் ஆயுள் காப்புறுதிகள் ஏற்றம் கண்டதே இதற்கு முக்கிய காரணம். ஜூலை மாதம் முதல் செப்டம்மர் மாதம் 30ம் தேதி வரை ஆயுள் காப்புறுதி விற்பனை 18 விழுக்காடு உயர்வு பெற்றது. இக்காலகட்டத்தில் கூடுதல் காப் புறுதி அம்சங்களுடன் விற்கப்பட்ட காப்பீட்டுக் கட்டணம் 523 மில்லியன் வெள்ளி ஆகும். இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் இதைவிட அதிக மான ஆயுள் காப்புறுதித் திட்டங் கள் விற்கப்பட்டன. இந்தக் காப் பீட்டுக் கட்டணங்களின் மொத்த விலை 1.46 பில்லியன் வெள்ளி ஆகும்.
Thursday, November 10th, 2011
திமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை பணியில் இருந்து நீக்குவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் இரவு அதிரடியாக அறிவிப்பு விடுத்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வரும்போ தெல்லாம் திமுகவால் அமர்த்தப் பட்ட மக்கள் நலப்பணியாளர்களை பணியில் இருந்து நீக்குவது வழக்கம். இந்த முறை இந்த பணி நீக்கும் செயல் சற்றுத் தாமதமாக நடந்துள்ளது. கடந்த 1990ம் ஆண்டு திமுக அரசில், அரசின் திட்டங்கள் கிராம மக்களுக்கு சென்று சேர வும், அத் திட்டங்களால் பயன் அடைந்தோர் பற்றிய விவரங் களைச் சேகரித்துத் தரவும், மக்கள் நலப் பணியாளர்கள் 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு.
Thursday, November 10th, 2011
ஹவ்காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு இம்மாதம் 5ம் தேதி நடத்திய இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் தொடர்பில் கலை நிகழ்ச்சியுடன் உன்னதத் திட்டம் ஒன்றை அறி முகப்படுத்தியது. “நீங்கள் தனியாக இல்லை” எனும் அந்தத் திட்டம் பள்ளிகளில் மாணவர்கள் சிறப்பாகச் செய்ய ஊக்குவிக்கும் வகையில் துணைப் பாட வகுப்புகளை நடத்தும். இதை ஹவ்காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் சிண்டா வும் இணைந்து நடத்துகின்றன. தற்போது இத்திட்டத்தில் சேர சுமார் 40 சிறுவர்கள் பதிந்து கொண்டுள்ளனர்.
Thursday, November 10th, 2011
இந்திய நாட்டவரான முருகையன் செல்வம் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நிரந்தரவாசி யான அந்த 32 வயது ஆடவர் 2009 டிசம்பர் 3ம் தேதிக்கும் 4ம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காக்கி புக்கிட் கிரசெண்டிலுள்ள அவரது அறையில் உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் கருவி யால் அடித்துக் கொல்லப்பட்டார்.
Thursday, November 10th, 2011
சந்தேகம் வேண்டாம்: சூர்யா ‘7ஆம் அறிவு’ வெற்றியா இல்லையா என்று அனைத்துலக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருத்த விவாதங்களும் பெரும் கூச்சல்களும் இடம்பெற்றுள்ள நிலையில், அதீத பெருமிதத்தோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் சூர்யா. வழக்கம்போல் கேள்விக்கணைகள் பறந்து வர, கோபப்படாமல், அவசரப்படாமல் தனக்கே உரிய நிதானத்துடன் சூர்யா பதில் அளித்ததுதான் ஹைலைட். “என்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றியும் முந்தைய படத்தின் வெற்றியை முறியடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். இதை நீங்கள் பேராசை என்று நினைத்தாலும் சரி, நியாயமான ஆசை என்று சொன்னாலும் சரி. இந்தப் படத்திலும் அதுதான் நடந்திருக்கு.
Thursday, November 10th, 2011
கிரீஸ் நாட்டின் இடைக்கால அரசாங்கம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் 3வது நாளாக எந்த முன்னேற்றமும் ஏற் படாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பதவி விலகுவதற்கு ஒப்புக் கொண்ட பிரதமர் ஜார்ஜ் பப்பன்டிரியோ, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்து வதற்கு முன்பு அதிபரை சந்தித்தார் என்றும் அதிகாரிகள் கூறினர். ஐரோப்பிய ஒன்றியம் நெருக்குதல் அளித்து வரும் வேளையில் கிரீசில் புதிய அரசாங் கத்தை அமைக்கும் முயற்சி மும்முரமடைந்துள்ளது. அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கடன் சும
Thursday, November 10th, 2011
- சத்தியா ஜெயபாண்டியன் - இளம் விஞ்ஞானிகளுக்கான விருது வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்வாண்டு விருது பெற்ற மூவரில் 32 வயதாகும் திரு உத்தம்சந்தானி மகேஷும் ஒருவர். டிஎஸ்ஓ தேசிய ஆய்வுக்கூடத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் திரு மகேஷ் இதுவரை பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் திடீர் மாரடைப்பு உண்டாவதைத் தவிர்ப்பது எப்படி என்ற ஆய்வில் இறங்கியுள்ளார். “கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டு வரு கிறேன்.
Thursday, November 10th, 2011
சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வாங்கிய பொருட்களுக்கான பொருள் சேவை வரியை திரும்பப் பெற்றுக்கொள்ளும் முறை எளிமையாக்கப்பட உள்ளது. சிங்கப்பூருக்கு சுற்றுப் பயணியாக வருவோர் தங்களது பயணத்தை முடித்துவிட்டு கிளம்பும் வேளையில் விமான நிலையத்தில் பொருள் சேவை வரியைத் திரும்பப் பெற முடியும். அதற்காக, சில்லறை வர்த்தகர்கள் கையொப்பமிட்ட படிவத்தை நிரப்பி விமான நிலையத்தில் சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. சில்லறை வர்த்தகம் பெருகி வருவதால் இம்முறையை எளிமைப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Thursday, November 10th, 2011
நியூயார்க்: நிதி மோசடி வழக்கில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நியூயார்க் பங்கு வர்த்தகர் ராஜ் ராஜரத்னத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 92.8 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. முன்னைய கேலியன் குரூப் என்ற நிதி நிறுவனத்தை நிறுவிய அவருக்கு இந்த பெருந் தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அமெரிக்க வரலாற்றில் இல்லாத ஆகப்பெரிய நிதி வர்த்தக மோசடியில் ஈடு பட்டதற்காக இலங்கையில் பிறந்த ராஜரத்னத்தின் மீது கடந்த மே மாதம் சதி, மோசடி தொடர்பில் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. சட்டவிரோத வர்த்தகம் மூலம் லாபம் பெற்ற தொகையைப் போல மூன்று மடங்கு அபராதமாக விதிக்க வேண்டு
Thursday, November 10th, 2011
கோலாலம்பூர்: அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று நாணய மாற்று வியாபாரிகளிடம் 930,000 ரிங்கிட் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவரை மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர்.
Thursday, November 10th, 2011
மெரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் ஜாக்பாட் பரிசு வென்ற திருமதி சூ ஹோங் எங்குக்கு முழுப் பணத்தையும் தர மறுத்து வந்த சூதாட்டக் கூடம் இப்போது சம்மதித்துள் ளது.
Wednesday, November 9th, 2011
தங்கள் ஊழியர்களைச் சூதாட அனுப்பும் முதலாளிகள் பெரிய தவற்றைச் செய்கிறார்கள் என்று சமூக வளர்ச்சி, இளையர், விளை யாட்டுத்துறை துணை அமைச்சர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். சூதாட்டத் தடையை எதிர் நோக்கும் சில முதலாளிகள் தங் கள் சார்பில் சூதாட தங்கள் ஊழியர்களை அனுப்புகிறார்கள் என்று அண்மையில் சில புகார்கள் கிளம்பியது பற்றி திருவாட்டி ஹலிமா நேற்று கருத்துரைத்தார். அரசாங்கம் இத்தகைய முறைகேடுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் தமது அமைச்சு மனிதவள அமைச்சுடன் இணைந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும் என்றும் கூறினார். “இது பெரிய தவறு. இவ்வாறு முதலாளிகள் ஒருபோதும் செய்யக் கூடாது.
Thursday, November 10th, 2011
கோலாலம்பூர்: மலேசியாவில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி வங்கி இயந்திரத்தில் பணம் எடுப்ப வர்களைக் குறி வைத்து வழிப்பறி செய்யும் கும்பல்கள் இப்போது ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே கடத்தி விடும் வேலையில் இறங்கி யுள்ளன.
Thursday, November 10th, 2011
பெய்ஜிங்: அனைத்துலக பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டி, உலகப்பொருளியல் நிச்சய மற்ற, நிதி நிலைத்தன்மையற்ற சூழலில் விழுந்து விடக்கூடிய அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார். அதனால் ஆசிய பொருளியல் நாடுகள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பெய்ஜிங்கில் நடைபெற்ற அனைத்துலக நிதி கருத்தரங்கில் அவர் பேசினார். ஆசிய நாடுகளை ஐரோப்பிய வட்டாரங்களில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தாக்காது என்று கூற முடியாது என்றும் அவர் சொன்னார். ஐரோப்பிய நாடுகளின் கடன் பிச்சினைகளை நோக்கமாகக் கொண்டு அவர் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சீனா வந்துள்ளார். “நாம் சேர்ந்து செயல்படவில்லை யென்றால்
Thursday, November 10th, 2011
பேங்காக்: தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ர, வெள்ளம் ஏற்படுத்திய சேதத்திலிருந்து மீண்டு வரு வதற்காக 4 பில்லியன் டாலருக்கு மேல் உதவிகள் வழங்கப்படும் என்று நேற்று உறுதி அளித்தார். ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளத்தில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். டன் கணக்கான அரிசி சேதம் அடைந்தது. அனைத்துலக தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
Syndicate content