Thursday, January 12th, 2012
- ப. பாலசுப்பிரமணியம் -
உயரம் 1.76 மீட்டர், எடை 72 கிலோ, வயது 18. மலேசிய சூப்பர் லீக் ஆட்டங்களில், மத்திய திடல் ஆட்டக்காரரான பிரவீன் குணசேகரன், 28 பேர் கொண்ட லயன்ஸ்XII குழுவில் இடம்பெறும் ஆக இளைய வீரராக திகழ்கிறார்.
உடல் வலிமையை பயன்படுத்தி எதிர்தரப்பு தாக்குதல்களை முறியடிப்பதும் தன் விருப்பான விளையாட்டாளர் ஸ்டீவன் ஜெராட்டைப் போல ‘பெனல்ட்டி’ வட்டத்துக்குள் வெளியிலிருந்து அபாரமாக கோல் போடுவதும் இவரது தனித்துவ விளையாடும் பாணி.
உள்நாட்டில் தொடங்கிய பிரவீனின் காற்பந்து பயணம் ஆஸ்திரேலியா வரை சென்றுள்ளது. சூகுன் தொடக்கப் பள்ளி குழுவிற்காக இவர் அடித்த கோல் வேட்டையைக் கண்டு இவரின் பயிற்றுவிப்பாளர் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் இவரை சேருமாறு ஆலோசனை வழங்கினார்.
முழு விவரம் 12.1.2012 தமிழ் முரசில்