You are here

நால்வர் அடிதடி; விசாரணை

பெனின்சுலா எக்சல்சியர் ஹோட்டலில் நான்கு ஆடவர்கள் மோதிக்கொண்ட ஒரு சம்பவம் காணொளியில் படம் பிடிக்கப்பட்டது. ஃபேஸ்புக்கில் டிசம்பர் 4ஆம் தேதி பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளி, 2,000க்கும் அதிக தடவை பார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த அடிதடி சம்பவம், எண் 5 கோல்மென் ஸ்திரீட்டில் இருக்கும் அந்த ஹோட்டலில் நவம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்தது. சம்பவம் பற்றி போலிஸ் புலன்விசாரணை நடக்கிறது.

நால்வர் மோதிக்கொண்டனர். படம்: ஃபேஸ்புக்/ கென் சூய்