You are here

‘மேன்யூவுடன் மோத அச்சப்படுவர்’

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு முந்திய சுற்றுக்கு இங்கி லிஷ் பிரிமியர் லீக் ஜாம்பவான் மான்செஸ்டர் யுனைடெட் தகுதி பெற்றுள்ளது. சிஎஸ்கேஏ மாஸ்கோவுக்கு எதிராக நேற்று அதிகாலை நடை பெற்ற ஆட்டத்தில் 2-=1 எனும் கோல் கணக்கில் யுனைடெட் வாகை சூடியது. இந்நிலையில், காலிறுதிக்கு முந்திய சுற்றில் யுனைடெட்டைச் சந்திக்க மற்ற குழுவினர் அஞ்சு வர் என்று அதன் நிர்வாகி ஜோசே மொரின்யோ தெரிவித்துள்ளார். “காலிறுதிக்கு முந்திய சுற்றில் எந்தக் குழுவுடன் மோதப் போகி றோம் என்பது முக்கியம் இல்லை. எந்தெந்த குழுக்கள் எந்தெந்த பிரிவில் இருப்பது என்பதை நிர்ணயிக்கும் குலுக்கல் முறையில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்த தில்லை. “எனவே அதைப் பற்றி நான் யோசிக்கப் போவதில்லை. காலிறுதிக்கு முந்திய சுற்று அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத் தில்தான் நடைபெறும். அதுவரை இங்கிலிஷ் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணப் போட்டியில் கவனம் செலுத்தவேண்டும். “முதல் சுற்றின் கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்து காலிறுதிச் சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறாதது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று மொரின்யோ கூறினார்.