You are here

டெஸ்ட் சமநிலை; இந்தியா சாதனை

புதுடெல்லி: இந்தியா - இலங் கை அணிகள் மோதும் மூன் றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தது. மூன்றாவது டெஸ்ட் புதுடெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 536 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி இரட்டைச் சதமும் (243 ஓட்டங்கள்), முரளி விஜய் சதமும் (155 ஓட்டங்கள்) அடித்தனர். இலங்கையின் சன்டகன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்கள் எடுத்தது. சன்டிமால் (164 ஓட்டங்கள்), மேத்யூஸ் (111 ஓட்டங்கள்) ஆகியோர் சதம் அடித்தனர். அஸ்வின், இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 163 ஓட்டங்கள் முன்னிலை யில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது ‘டிக்ளேர்’ செய்தது.