You are here

சுகாதாரப் பராமரிப்புக்கான அரசின் செலவு கூடுகிறது

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், அரசாங்கத்தின் சுகாதாரப் பராமரிப்புச் செலவு அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு களிலும் அதற்குப் பிறகும் வெகு வாக அதிகரிக்கும் என எதிர் பார்க்கிறார். சாங்கி பொது மருத்துவமனை யையும் செயின்ட் ஆண்ட்ருஸ் சமூக மருத்துவமனையையும் புதன்கிழமை சுற்றிப்பார்த்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசி னார். எதிர்வரும் 2020ம் ஆண்டுக் குள், அரசாங்கத்தின் சுகாதாரப் பராமரிப்புச் செலவு ஆண்டுக்குக் குறைந்தது $3 பில்லியன் அதி கரிக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்கீழ், சுகாதார அமைச் சுக்கு $10 பில்லியன் கிடைத்தது. 2010ம் ஆண்டில் கிடைத்த $4 பில்லியனைவிட இது அதிகம். “மருத்துவத் தொழில்நுட்பம் மேம்படுவதாலும் மக்கள் தொகை மூப்படைவதாலும் தேவைகள் அதிகரிக்கும், அந்தத் தேவை களை நிறைவேற்றுவதற்கான அவசியமும் அதிகரிக்கும்,” என்று அவர் கூறினார். எனவே, 2020 முதல் ஆண் டுக்குக் ‚குறைந்தது $13 பில்லி யன் தேவைப்படும் என்பது அமைச்சரின் கணிப்பு. இந்தத் தொகை ‚ஆரம்பக் கணிப்பே என்றும் ‚அடுத்த சில ஆண்டுகளில் நாம் எவ்வளவு சிறப்பாகச் சமாளிக்கிறோம் என் பதைப் பொறுத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.