You are here

உ.பி. தேர்தலில் பாஜகவினரில் பாதிப் பேர் வைப்புத் தொகை இழப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத் தில் அண்மையில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது. 16 மேயர் பதவிக்கான மாநகராட்சி தேர்தலில் 14ல் பார திய ஜனதா கட்சி வென்று சாதனை படைத்தது. ஆனால் மற்ற நகர அமைப்புகளில் பாஜக வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மாநகராட்சி, நகராட்சி ஆகிய தொகுதிகளில் மொத்தம் 12,644 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சி 2,366 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இது உத் தரப்பிர தேசத்தில் பாஜகவுக்கு இருந்த செல்வாக்கு சரிந்துள்ளதையே காட்டு கிறது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன் றத் தேர்தல் நடந்தபோது உத்தரப்பிரதேசத்தில் மோடி அலை வீசியது.

பதினாறு மாநகராட்சிகளில் 48.5 விழுக்காட்டு வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. ஆனால் அண் மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த 16 மாநக ராட்சி களிலும் பாஜகவுக்கு 41 விழுக் காடு வாக்குகளே கிடைத்துள்ளன. சுமார் 7 விழுக்காட்டு வாக்குகளை மாநகராட்சித் தொகுதிகளில் பாஜக இழந்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி உள் ளாட்சி அமைப்புகளில் பாஜக 2,366 இடங்களில் வென்றபோதி லும் 3,656 பேர் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். அதா வது உள்ளாட்சித் தேர்தலில் போட் டியிட்ட பாஜக வேட்பாளர் களில் 45% வைப் புத் தொகை யைப் பறி கொடுத்துள் ளனர். இந்தச் சூழலில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவின் வாக்குகள் ‘நோட்டா’ விற்கு கணிசமாகப் பிரிவது அக் கட்சிக் குச் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.