You are here

சீன நிறுவனத்திடம் இலங்கை துறைமுகம் ஒப்படைப்பு

இலங்கை தனது தென் பகுதியில் உள்ள துறைமுகத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக சீன நிறு வனத்திடம் நாளை மறுதினம் ஒப்படைக்க உள்ளது. அதற்காக அந்த நிறுவனத்திட மிருந்து 300 மில்லியன் அமெ ரிக்க டாலரை இலங்கை பெறும் என்றும் இது இரு நாடுகளும் செய்துகொண்ட 1.1 பில்லியன் டாலர் உடன்பாட்டின் ஒரு பகுதி என்றும் துறைமுக அமைச்சர் மகிந்த சமரசிங்கே தெரிவித்துள் ளார். சீனாவால் கட்டி எழுப்பப்பட்ட ஹம்பன்தோட்டா துறைமுகத்தை ‘சைனா மெர்ச்செண்ட்ஸ் போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ்’ நிறு வனத்துக்கு வழங்குவதற்கான அந்த உடன்பாடு கடந்த ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்டது. அதன் படி அந்தத் துறைமுகத்தை சீன நிறுவனம் 99 ஆண்டு குத் தகைக்கு ஏற்கும். இப்போது தரப்படும் தொகை தவிர இன்னும் ஒரு மாத காலத் தில் பத்து விழுக்காடு, அதாவது 100 மில்லியன் டாலரை இலங்கை பெறும் என்றும் எஞ்சிய முழுத்தொகையும் ஆறு மாதங்களில் சீன நிறுவனத்திடமிருந்து பெறப் படும் என்றும் திரு சமரசிங்கே கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.