You are here

புது நாயகனுடனும் ஜோடி சேர்வேன் - ரம்யா நம்பீசன்

  • ரம்யா நம்பீசன்.

பிற மொழிப் படங்களிலும் நடிப்பதால் தமிழில் தொடர்ந்து நடிக்க இயலாமல் இடைவெளி ஏற்படுவதாகச் சொல்கிறார் ரம்யா நம்பீசன். தற்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். தமிழில் இவரது நடிப்பில் ‘சத்யா’, ‘நட்புனா என்னன்னு தெரியுமா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அறிமுக நாயகனாக இருந்தாலும் ஜோடி சேரத் தயார் என்கிறார் ரம்யா. “என்னைப் பொறுத்தவரை நாயகன் புதுமுகமாக இருந்தாலும் கவலை இல்லை. ஏனெனில் ஒரு படத்துக்கு கதைதான் ரொம்ப முக்கியம். “இதற்கு முன்பு ‘சேதுபதி’ படத்தில் அம்மாவாகவும், ‘ஒருநாள் ஒருகனவு’ படத்தில் ஸ்ரீகாந்த் தங்கையாகவும் நடித்திருக்கிறேன். அதன் பின் ‘ராமன் தேடிய சீதை’, ‘குள்ள நரி கூட்டம்’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தேன். “தங்கையாக நடித்தால் கடைசி வரை தங்கையாகத்தான் நடிக்க வேண்டி இருக்கும் என்றார்கள். அதை உடைக்கவே நாயகியானேன்,” என்கிறார் ரம்யா நம்பீசன்.