You are here

குண்டு வீச்சு பயிற்சியில் ஈடுபடும் தென்கொரியா, அமெரிக்கா

  • படம்: தென்கொரிய தற்காப்பு அமைச்சு

சோல்: தென்கொரியாவுடன் 230 போர் விமானங்கள் பங்கேற்கும் ராணுவப் பயிற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இதில் ஒலி வேகத்தில் பறக்கும் ‘பி-1பி’ குண்டு வீச்சு விமானங் களையும் அமெரிக்கா ஈடுபடுத்து கிறது என்று அடையாளம் தெரி யாத தகவலை சுட்டிக்காட்டி யோன் ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் இதே ‘பி-1பி’ விமானம்தான் வடகொரி யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ராணுவமில்லாத பகுதி யில் பறந்துசென்றது.

இது, வடகொரியாவுக்கு ஆத் திரத்தையும் மூட்டியது. இதனால் அனைத்துலக ஆகாயவெளியில் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்த தனக்கு உரிமையுள்ளது என்று வடகொரியா எச்சரித்தது. ஆனால் அமெரிக்காவின் பசி பிக் வட்டார விமானப் படை பேச் சாளர் லோரி ஹோட்ஜ், “பாதுகாப்பு காரணங்களுக்காக எதிர்கால பயிற்சி பற்றிய விவரங்களை வெளியிட முடியாது,” என்றார். இவ்வட்டாரத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே அமெ ரிக்காவின் போர் விமானங்கள் சுழற்சி அடிப்படையில் இருந்து வருகின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

தென்கொரியாவுடனான ராணுவப் பயிற்சியில் அமெரிக்காவின் நவீன ‘பி-1பி’ லான்சர்(வலம்) குண்டு வீச்சு விமானங்களும் தென்கொரியாவின் ‘எஃப்-16’ போர் விமானங்களும் ஈடுபட்டுள்ளதை காட்டும் இந்தப் படத்தை நேற்று தென்கொரிய தற்காப்பு அமைச்சு வெளியிட்டது. படம்: தென்கொரிய தற்காப்பு அமைச்சு