You are here

சில நொடிகளில் காயங்களை ஆராயும் ‘ஸ்கேனர்’

கடுமையான, ஆழமான காயங் களை சில நொடிகளில் ஆய்வு செய்யக்கூடிய ஸ்கேனரை சிங் கப்பூர் உருவாக்கியுள்ளது. சாதா ரணமாக இத்தகைய காயங்களை ஆராய்ந்து, அதன் தன்மைகளை அறிய தாதிக்கு கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும். மேலும் துல்லியமாகவும் இந்த ஸ்கேனரால் காயத்தை ஆராய முடியும். ‘குரோனிகேர்’ எனப் படும் இந்த ஸ்கேனர் செயிண்ட் ஆண்ட்ருஸ் சமூக மருத்துவ மனையில் ஆகஸ்ட் மாதம் முதல் சோதிக்கப்பட்டு வருகிறது.

நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று இந்த மருத்துவ மனைக்கும் அருகிலுள்ள சாங்கி பொது மருத்துவமனைக்கும் நேற்று சுற்றப்பயணம் மேற் கொண்டபோது பார்வையிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கருவிகளில் இதுவும் ஒன்று. திரு ஹெங் தலைமையிலான எதிர்கால பொருளியல் குழு சுகாதாரப் பராமரிப்பை வளர்ச்சித் துறைகளில் ஒன்றாக அடை யாளம் கண்டுள்ளது. குடல்புண் முதல் விபத்து களால் ஏற்படும் காயங்கள் வரை பலவகையான காயங்களை இந்த ஸ்கேனரால் கண்டறிய முடியும். காயம் பற்றி அறிந்துகொள்ள வும் சிகிச்சைக்கும் தேவையான விரிவான தகவல்களை இந்த ஸ்கேனர் வழங்கும்.