You are here

ஒரிசாவில் தொடரும்

பாலியல் தொந்தரவு புவனேஸ்வர்: கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவி ஒருவரை நடு சாலையில் வைத்து மான பங்கப்படுத்திய இளையர் களை போலிசார் கைது செய்துள்ளனர். ஒடிசாவின் பர்கர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் அந்த இளையர்கள், அந்தப் பெண்ணுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து அந்தக் காட்சியை காணொளி யாகப் பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.