You are here

சிங்கப்பூர்=ஈப்போ பேருந்து விபத்தில் சிக்கி ஒருவர் மரணம்

சிங்கப்பூரில் இருந்து சென்ற பேருந்து ஒன்று மலேசியாவின் பேராக் மாநிலத்தில் நேற்று விபத்தில் சிக்கியது. கோப்பேங் அருகே வடக்கு =தெற்கு விரைவுச் சாலையில் லாரியுடன் அப்பேருந்து மோதி யதில் ஒருவர் மாண்டார், 13 பேர் காயமுற்றனர். அந்த ஈரடுக்குப் பேருந்து லாரியின் பின்புறம் மோதியதாக நம்பப்படுகிறது. அந்த நேரத் தில் பேருந்தின் பின்னால் வந்து கொண்டு இருந்த கொள்கலன் லாரி தனது வேகத்தைக் கட்டுப் படுத்த இயலாமல் பேருந்தின் பின்னால் மோதியது. காயமுற்றோரில் 12 பேர் பேருந்து பயணிகள். சிங்கப்பூரி லிருந்து ஈப்போ நோக்கி அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்த தாக தீயணைப்பு, மீட்புத் துறை யின் சிம்பாங் பூலாய் பிரிவுத் தலைவர் எஸ்.கணேசன் தெரி வித்ததாக பெர்னாமா குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் இருந்து சென்ற ஈரடுக்கு பேருந்து உள்ளிட்ட மூன்று வாக னங்கள் ஒன் றோடு ஒன்று மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஒருவர் மாண்டார். பெண்கள் உள்ளிட்ட 13 பேர் காயமுற்றனர். படம்: சின் சியூ டெய்லி