You are here

தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

  • ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் தென் பகுதி மாநிலங்களில் பல நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். கடந்த நவம்பர் மாதம் முதல் கனமழை பெய்து வருவதால் ஒன்பது மாநிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாலைகள் உட்பட பல இடங்கிகளில் வெள்ளநீர் தேங்கி யுள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிவினை வாதிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையே சண்டை நடந்து வரும் தென்பகுதி மாநிலங்கள் இந்த பருவ மழையால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. இம்மாதம் 10ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.