You are here

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டம்

  • படம்: இந்திய ஊடகம்

ஆர்கே நகரில் சுயேச்சையாகக் களம் இறங்கியிருக்கும் தமிழ் திரைப்பட நடிகர் விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங் கத்தின் தலைவராகவும் இருக் கிறார். இந்தத் தலைவர் பதவியை அவர் கைவிட வேண்டும் என்று இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்து இருக் கிறார்கள். விஷால் பதவி விலகும் வரை காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அவர்கள் மிரட்டல்விடுத்து இருக்கிறார்கள். திரைப்பட இயக்குநர் சேரன் தலைமையிலான அந்த உறுப் பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சங்கத்தின் நலன் களைவிட விஷால் தன் செந்த நலனையே பெரிதாகக் கருது கிறார் என்று அவர்கள் கூறு கிறார்கள். “விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகி எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை,” என்று சேரன் குறிப்பிட்டார்

ஆர்கே நகரில் நடிகர் விஷால் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதற்கிடையே, விஷாலின் வேட்புமனுவும் தீபாவின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படம்: இந்திய ஊடகம்