You are here

பாலியல் கொடுமைக்கு மத்திய பிரதேசத்தில் மரண தண்டனை

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12 வயதுக்கு குறைந்த சிறுமியைப் பாலியல் கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய் யும் மசோதாவை அந்த மாநிலத் தின் சட்டமன்றம் நிறைவேற்றி இருக்கிறது. சிறுமிகளைப் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குவோர் மனித பிறவிகளே அல்ல என்றும் அவர்கள் வாழ்வதற்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்ஹான் தெரி வித்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நவம்பர் மாத தொடக்கத்தில் 19 வயது பெண்ணை நான்கு பேர் மூன்று மணி நேரம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள்.

இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டு விட்டது. பெண்களைக் கொடுமைப் படுத்துவோருக்கு எதிராக கடுமை யான நடவடிக்கைகள் தேவை என்று சமூகத்தின் பல துறை யினரும் குரல்கொடுக்கத் தொடங் கினர். அரசாங்கம் அந்தக் குரல் களுக்கு செவிசாய்த்து புதிய மசோதாவை நிறைவேற்றி இருப்ப தாகக் கூறப்படுகிறது.