You are here

கறுப்பு நிற மழைநீர்: மக்கள் பீதி

நாகை: சீர்காழி அருகே உள்ள கடலோரக் கிராமங்களில் கறுப்பு மழை பெய்ததாகப் பரபரப்பு நிலவுகிறது. இங்குள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் மழை நீரை பாத்திரங்கள், வாளி, கேன்களில் பிடித்து வைத்தனர். எனினும் மழை நீர் அடர் கறுப்பு நிறத்துடன் காணப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். காற்றில் உள்ள மாசு மழை நீரில் கலந்து, தண்ணீர் கறுப்பாகி இருக்கலாம் என்றும் கடலோர பகுதிகளில் உள்ள அனல் மின் நிலைய புகையின் கருந்துகள்கள் மழை நீருடன் கலந்து வந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.