You are here

ஜெருசலம் தொடர்பில் டிரம்ப்பிற்கு புதிய எச்சரிக்கை

பாரிஸ்: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அங்கீகரிக் கக்கூடும் என்று பரவலாகப் பேசப் படும் வேளையில் அமெரிக்க அதிபர் அத்தகைய முடிவை எடுக் கக்கூடாது என்று அமெரிக்காவின் நட்பு நாடுகளும் அரபு நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்க நட்பு நாடுகளில் ஒன்றான பிரான்சும் அதன் கவலையை வெளிப்படுத்தியுள் ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீ கரிக்கக்கூடும் என்பது குறித்து தான் கவலைப்படுவதாக பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன் அதிபர் டிரம்பிடம் தெரி வித்துள்ளார்.

இது குறித்து எந்த முடிவு எடுப்பதாக இருந் தாலும் அது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் பேச்சு வார்த்தையின் வரையறைக் குள்ளேயே இருக்க வேண்டும் என்று திரு மெக்ரோன் கூறினார். முன்னதாக திரு டிரம்ப்பிற்கு ஜோர்தான் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேலின் தலைநகராக ஜெரு சலத்தை அமெரிக்கா அங்கீ கரித்தால் கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டிவரும் என்று ஜோர்தானிய வெளியுறவு அமைச்சர் எச்சரித்திருந்தார். ஜெருசலம் விவகாரம் தொடர்பில் திரு டிரம்ப் அவரது முடிவை இந்த வாரம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் திரு டிரம்ப், ஜெரு சலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.