You are here

ஆசியானின் பொருளியலை வலுப்படுத்த சிங்கப்பூர் விருப்பம்

அடுத்த ஆண்டில் ஆசியான் அமைப்புக்கு தலைமைத்துவப் பொறுப்பேற்கவிருக்கிறது சிங் கப்பூர். அதையடுத்து ஆசியா வைச் சேர்ந்த மக்களையும் பொரு ளியலையும் அறிவார்ந்த நகரங் களின் கட்டமைப்பில் இணைக்க சிங்கப்பூர் விரும்பு கிறது. அதேவேளையில் ஆசிய நாடுகளுக்கு இடையே இணையப் பாதுகாப்பையும் ஊக்குவிக்க சிங் கப்பூர் விரும்புகிறது. இதனை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ் ணன் (படம்) நேற்று ஐஎஸ்இஏஎஸ்= யூசோஃப் இஷாக் கல்விக்கழகத்தில் நடந்த 15வது ஆசியான் உரையில் ‘ஆசியான்: நெக்ஸ்ட்50’ என்ற தலைப்பில் உரையாற்று கையில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “இணைய பாதுகாப்பு அம்சங்களில் நாம் உடனடியாகக் கவனம் செலுத் தியாக வேண்டும். இல்லையெனில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப வளர்ந்து வரும் அறிவார்ந்த உல கில் நாம் அடியெடுத்து வைக்கவோ மின்னியல் பரிவர்த்தனைச் சேவைகளைக் கொண்டிருக்கவோ முடியாது,” என்றார் அமைச்சர் விவி யன். அந்த நிகழ்ச்சியில் வர்த்தகத் தலைவர்கள், அரச தந்திரிகள், கல்வியாளர்கள் என சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.