You are here

திறன்மிகு நவீன போர்க்களக் கட்டமைப்பு

எதிரிகள் எங்கே இருக்கிறார்கள், எப்போது அவர்களைத் தாக்க வேண்டும் என்பது பற்றிய உளவுத் தகவலை சிங்கப்பூர் ஆயுதப் படை யின் படைப்பிரிவுகளிடம் தெரியப் படுத்தும் அதிநவீன, போர்க்களக் கட்டமைப்பு இப்போது மேலும் திறன்மிக்கதாக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆணை, கட்டுப்பாட்டு இயங்கு முறையில் (சி2) தற்காப்பு அறிவி யல், தொழில்நுட்ப அமைப்பு மேம் பாடுகள் செய்தது. இப்போது, படைத்தலைவர்களும் நடத்துநர் களும் விரைவாக, மேம்பட்ட தீர் மானங்கள் எடுக்கும் வகையில் மேலும் ஒருங்கிணைந்த போர்க் களத் தகவலை இயங்குமுறை தெரிவிக்கும்.

மேம்படுத்தப்பட்ட புதிய முக் கிய அம்சங்களை அமைப்பு செவ் வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த அம்சங்கள், தற்போது அரி சோனாவின் பீனிக்ஸ் நகருக்கு அருகில் நடைபெற்றுவரும் “ஃபோர்ஜிங் செப்ர” பயிற்சியில் சோதிக்கப்படுகின்றன அல்லது அறிமுகப்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக, சோதிக்கப் பட்டுவரும் புதிய காணொளி பகுப்பாய்வு தொழில்நுட்பத்துடன், படைத்தலைவர்கள் எதிரி இலக்கு கள் அடைந்த சேதத்தைத் துல்லிய மாகக் கணித்து, சிங்கப்பூர் ஆயு தப்படையின் தாக்குதல் வெற்றி அடைந்ததா என விரைவாக நிர் ணயித்து, மேற்கொண்டு தாக்கு தல் நடத்தவேண்டுமா எனத் தீர் மானிக்க இயலும்.