You are here

ரியால் = டோர்ட்மண்ட் குழுக்கள் மோதல்

மட்ரிட்: ஐரோப்பிய காற்பந்துக் குழுக்களான ரியால் மட்ரிட், பொரு‌ஷியா டோர்ட்மண்ட் குழுக் கள் நாளை அதிகாலை நடைபெற வுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டி யில் மோதவுள்ளன. கடந்த சில போட்டிகளில் ரியால் மட்ரிட் நிலையான ஆட் டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் ‘ஹெச்’ பிரிவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டோர்ட்மண்ட் குழுவை அது வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடைசி ஆறு ஆட் டங்களில் டோர்ட்மண்ட் குழு ஒரு வெற்றிகூட பெறாத நிலையில், ரியால் மட்ரிட்டை வெல்வதும் கேள்விக்குறிதான். மேலும் கடந்த செப்டம்பர் மாதம் டோர்ட்மண்ட்டின் சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்திலும் 1=3 என ரியால் மட்ரிட்டிடம் தோல்வி அடைந்தது. அதுபோல் ரியால் குழுவின் சொந்த மண்ணில் டோர்ட்மண்ட் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இப்போட்டியில் டோர்ட்மண்ட் வெற்றி பெற்றால், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள அதன் வீரர்கள் ஊக்கம் பெறுவார்கள்.