You are here

குஜராத்தில் பாஜக= காங்கிரஸ் சமநிலை

குஜராத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கடும்போட்டி நிலவு வதாக ஆகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குஜராத் சட்டமன்றத்தில் மொத்தம் 182 இடங்கள் இருக்கின் றன. காங்கிரஸ் கட்சி 86 இடங் கள் வரை பிடிக்கும் என்றும் பாஜகவுக்கு 99 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் திங்கட் கிழமை வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டு கட்சிகளுக்குமே 43% வாக்குகள் கிடைக்கும். இருந்தாலும் பாஜக அதிக இடங் களைக் கைப்பற்றிவிடும் என்றும் ஆய்வு கூறுகிறது. இதே ஆய்வு நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் ஓர் ஆய்வை நடத் தியது. பாஜகவுக்கு 30 புள்ளிகள் அதிக ஆதரவு இருப்பதாகவும் அந்தக் கட்சி 150 இடங்களைப் பிடித்துவிடும் என்றும் அப்போது அது தெரிவித்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டதாக அதே ஆய்வு நிறு வனம் கூறுகிறது.