You are here

முன்னாள் ஜார்ஜிய அதிபர் உக்ரேனில் கைது; வெடித்தது ஆர்ப்பாட்டம்

கியவ்: முன்னாள் ஜார்ஜிய அதிபர் சாகாஸ்விலி உக்ரேனில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். கியவ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலி சார் தலையிட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களில் சிலர் கைது செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. முன்னாள் ஜார்ஜிய அதி பரான சாகாஸ்விலியை கைது செய்ய போலிசார் நேற்று கியவ் நகரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தனது வீட்டுக் கூரையில் நின்றபடி எதிர்ப்பு தெரிவித்தார். இதன் மூலம் அவர் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை ஈர்த்தார். போலிசார் சாகாஸ்விலியை கைது செய்து அழைத்துச் சென்ற போது நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

முன்னாள் ஜார்ஜியா அதிபர் மைக்கல் சாகாஸ்விலி உக்ரேனில் கைது செய்யப்ட்டததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கியவ் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. படம்: ராய்ட்டர்ஸ்