You are here

சிரித்துக் கொண்டிருந்த அறிமுக நாயகி; கன்னத்தில் அறைந்த இயக்குநர்

  • பிருத்விராஜ், வீணா

புதுமுக நாயகி ஒருவரை இயக்குநர் கன்னத்தில் அறைந்த விவகாரம் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எங்கே, எப்போது நடந்தது என்கிறீர்களா? விஷயம் இதுதான். மதுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. பிருத்விராஜ், வீணா ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பின்போது ஒருநாள், அறிமுக நாயகி வீணாவை அறைந்துவிட்டாராம் மதுராஜ். “வீணா கேரளாவைச் சேர்ந்தவர். ஒருநாள் முக்கியமான, உணர்வுபூர்வமான காட்சி ஒன்றைப் படமாக்கிக்கொண்டு இருந்தோம். ஆனால் அதன் முக்கியத்துவத்தை உணராமல் அவர் சிரித்தபடி ஜாலியாக இருந்தார்.

“இதனால் கிட்டத்தட்ட 30 டேக்கிற்கு மேல் போனது. அதனால் ஒரு கட்டத்தில் கோபம் வந்து அவரை அறைந்துவிட்டேன். அதன் பிறகு சூழ்நிலையை உணர்ந்து கச்சிதமாக நடித்தார். மற்றபடி படம் முழுவதும் நன்றாக நடித்துள்ளார் வீணா,” என்று விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர். படத்தில் இடம்பெறும் அதிரடி சண்டைக் காட்சிகளில் மதுராஜ் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடித்துள்ளாராம் பிருத்விராஜ்.