You are here

குறைந்த செலவில் மறுபயனீடு

மின்சாரத்தின் மூலம் குறைந்த செலவில் தொழிற்சாலைக் கழிவுகளை மறுபயனீடு செய்வது குறித்த புதிய முறையை உள்ளூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 6 வோல்ட்ஸ் மின்சாரத்தைப் பயன்படுத்தி கழிவுகளை மறுபயனீடு செய்யும் முறையை நேற்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினர். இதற்காகும் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் பெறும் திட்டமும் அவர்களிடம் உள்ளது.