You are here

கீர்த்தி: பொங்கலுக்கு வருகிறோம்

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அப்படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். அண்மையில் வெளியான படத்தின் முன்னோட்டத்துக்கு பலத்த வரவேற்பு அளித்துள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த கையோடு சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவன், அனிருத் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் கீர்த்தி.

“அனைவருக்கும் நன்றி... நாங்கள் பொங்கலுக்கு வருகிறோம்,” என்று டுவிட்டர் பதிவில் கீர்த்தி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாவது உறுதியாகி உள்ளது. ‘24’, ‘சிங்கம் 3’ படங்கள் வசூல் ரீதியில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. எனவே இந்தப் படத்தின் மீது சூர்யா பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகத் தகவல். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் ஆர்ஜே பாலாஜி, நந்தனா, ரம்யா கிருஷ்ணன், சத்யன், மூத்த நடிகர் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.