You are here

சிறப்பு கண்காட்சியில் பல அரிய பொருட்கள்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வில்சன் சைலஸ்

சிங்கப்பூர் வாழ் இந்தியர்களின் பாரம்பரிய வேர்களை அடையாளப் படுத்திய கேம்பல் லேனின் இந்திய மரபுடைமை நிலையம், தென் கிழக்காசிய வட்டாரத்தில் பரவிக்கிடக்கும் தொட்டுணர முடியாத இந்தியர்களின் மரபுடை மையைக் காட்சிப்படுத்த தயாராகி விட்டது. இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்தும் யானை, மாம்பழம், மயில் ஆகிய சின்னங்களுக்குப் பின்னால் உள்ள சுவாரசியமான கதைகளையும் அர்த்தங்களையும் இந்திய மரபுடைமை நிலையத்தின் சிறப்புக் கண்காட்சி எடுத்துரைக்க உள்ளது.

ஈரோட்டின் கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட ‘பிராமி’ எழுத்துகள் பொறிக்கப்பட்ட கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மட்கல ஓடுகள், சிங்கப் பூரில் குடியேறிய திருவாட்டி யேகம்மை ஆச்சியின் ஜாதகம் கொண்ட கி.பி. இருபதாம் நூற் றாண்டின் ஓலை சுவடி, செட்டியார் குடும்பத்தின் தமிழ்ப் பெயர் பதிக்கப்பட்ட வெள்ளி கிலு கிலுப்பை, கி.பி. 19ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த மாங்கா மாலை, காதணிகள் என 100க்கும் மேற்பட்ட அரிய கலைப் பொருட்கள் மரபுடைமை நிலையத் தில் காட்சிக்கு வைக்கப்படும்.

கேம்பல் லேனின் இந்திய மரபுடைமை நிலையம் ‘சின்னங்களும் வரி வடிவங்களும் ‘கைவினையின் மொழி’ என்ற கருப்பொருளில் சிறப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. அவற்றுள் அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்