You are here

கார்டியோலா: மாறுபட்ட தாக்குதல் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டேன்

மான்செஸ்டர்: வெஸ்ட் ஹேம் காற்பந்துக் குழுவை வீழ்த்தியதன் மூலம் மாறுபட்ட தாக்குதல் ஆட் டத்தைக் கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார் மான்செஸ்டர் சிட்டி யின் நிர்வாகி கார்டியோலா. இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் சில்வா போட்ட கடைசி நேர கோலால் மான்செஸ்டர் சிட்டி 2=1 என வெஸ்ட் ஹேம் குழுவை வீழ்த்தியது. இதன் மூலம் தற்போதைய காற்பந்து பருவத்தில் மான்செஸ்டர் சிட்டி 13 போட்டிகளில் தொடர்ச்சி யாக வெற்றி பெற்று செல்சி, ஆர் சனல் குழுக்களின் சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த பருவத்தில் செல்சியும் 2001=2002 பருவத்தில் ஆர்ச னலும் இதே சாதனையைப் பதிவு செய்திருந்தது. நேற்றைய ஆட்டத்தில் நீண்ட நேரத்திற்குப் பிறகு 44வது நிமிடத் தில் முதல் கோலைப் போட்ட வெஸ்ட் ஹேம்மின் தற்காப்பு ஆட் டத்தைத் தகர்க்க முடியாமல் திண றியது சிட்டி. மேலும் சிட்டி வீரர்களின் கோல் போடும் பல முயற்சிகளை வெஸ்ட் ஹேம் கோல் காப்பாளர் அட்ரின் தடுத்துவிட்டார். இந்நிலையில் 57வது நிமிடத் தில் வெஸ்ட் ஹேம் குழுவின் கோலைச் சமன் செய்தார் சிட்டி யின் நிகோலஸ் ஒட்டமென்டி.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் வெஸ்ட் ஹேம் குழுவிற்கு எதிரான ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்தபோது மான்செஸ்டர் சிட்டியின் வெற்றிக் கோலைப் போட்டார் டேவிட் சில்வா. படம்: ஏஎஃப்பி