You are here

ஜப்பானுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்க அபே சூளுரை

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் ஜப்பானுக்கு ‘உடனடி அச்சுறுத்தல்’ என்று ஜப்பானிய நாடாளுமன்றம் நேற்று அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் அர்த்தமற்றது என ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே கருத்துரைத்துள்ளார். வடகொரியா கடந்த வாரம் பரிசோதித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பானின் தனிப்பட்ட பொருளியல் வட்டாரத்துக்குள் அமைந்துள்ள கடல் பகுதியில் விழுந்ததை அடுத்து, அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதென ஜப்பானிய நாடாளுமன்ற மேலவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை

உருவாக்கும் பணியை வடகொரியா தொடர்வதையே இது காட்டுவதாக ஜப்பான் குறிப்பிட்டது. அனைத்துலக சமூகத்திற்கு எதிரான முக்கியமான இந்தச் சவாலைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது எனவும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது. அணுவாயுத, ஏவுகணைத் தொழில்நுட்பத்தை விட்டு வடகொரியா முற்றிலுமாக வெளியேறும் வரை தொடர்ந்து வடகொரியாவுக்கு அழுத்தம் தரப்போவதாக திரு அபே சூளுரைத்துள்ளார்.