You are here

மொரின்யோ: ட கியா சிறந்த கோல்காப்பாளர்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் ஆர்சனலை 3=1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனை டெட் நேற்று அதிகாலை வீழ்த் தியது. இந்த அபார வெற்றிக்கு அக் குழுவின் கோல்காப்பாளரான டாவிட் ட கியா முக்கிய காரணம் என்று யுனைடெட்டின் நிர்வாகி புகழாரம் சூட்டியுள்ளார். ஆர்சனலின் பல கோல் முயற்சி களை ட கியா முறியடித்தார். பந்து வலைக்குள் போவது திண்ணம் என்று கொண்டாடத் தயாரான ஆர்சனல் ரசிகர்கள் ஏமாற்றம் அடையும் வண்ணம் இருந்தது ட கியாவின் அதிரடி ஆட்டம். வலை நோக்கி சென்ற பந்தை அவர் பலமுறை தடுத்தும், தட்டி விட்டும் ஆர்சனலைத் தோல்வி யின் பிடியில் சிக்க வைத்தார். ஆட்டத்தின் 4வது நிமிடத்தி லேயே வெலன்சியா போட்ட கோல் மூலம் யுனைடெட் முன்னிலை வகித்தது. தொடக்கத்திலேயே விழுந்த பேரிடி காரணமாக ஆர்சனல் நிலைதடுமாற, அடுத்த ஏழு நிமிடங்களில் அதன் நிலை மோசமடைந்தது. ஆர்சனல் தற்காப்பு ஆட்டக் காரரின் கவனம் சிதற, அவரிட மிருந்து பந்து பறிக்கப்பட்டது. பெனால்டி எல்லைக்குள் விரைந்த லிங்கார்ட்டிடம் பந்து செல்ல, அதை அவர் கோலாக் கினார்.

ஆர்சனலின் லகாஸாட் (இடமிருந்து இரண்டாவது) வலை நோக்கி பந்தை அனுப்புகிறார். அதைப் பாய்ந்து தடுக்கிறார் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் கோல்காப்பாளர் டாவிட் ட கியா (நடுவில்). இதே போன்று ஆர்சனலின் பல கோல் முயற்சிகளை ட கியா தவிடு பொடியாக்கினார். ட கியா மட்டும் விழிப்புடன் இருந்திருக்கா விட்டால் ஆர்சனல் மேலும் பல கோல்களைப் போட்டு தோல்வியைத் தவிர்த்திருக்கும். படம்: ஏஎஃப்பி