You are here

இல்லம் நோக்கி பதற்றமிக்க பயணம்

சுதாஸகி ராமன்

பரபரப்பான சிங்கப்பூரை விட்டு பசுமையான பாலித் தீவிற்கு மேற் கொள்ளப்பட்ட விடுமுறைப் பயணம் விபரீதத்தில் முடியும் எனக் கனவிலும் நான் நினைக்க வில்லை. இத்தனைக்கும் பாலித் தீவுக்குச் செல்வது இதுவே எனக்கு முதல்முறை. பாலித் தீவின் கிழக்கில் உள்ள அகுங் எரிமலை கடந்த செப் டம்பர் மாதத்திலிருந்தே புகை யைக் கக்கி அச்சுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, பாலிக்குச் செல்லவேண்டாம் என்றும் அப்படியே சென்றால் எரி மலை அருகில் உள்ள பகுதிகளைத் தவிர்க்கவும் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை நான் பாலிக்குப் புறப்படுவதற்கு ஒருநாள் முன்பு வெளியிடப்பட்டது. பாலித் தீவின் மத்தியப் பகுதியிலும் தென் பகுதியிலும் தானே சுற்றப் போகிறோம், இவை எரிமலையி லிருந்து வெகுதூரம் உள்ளதா யிற்றே என்று எண்ணியவாறு அமைச்சின் எச்சரிக்கையை அப்போது நான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.