You are here

வெள்ள அபாயத்தை தடுக்க $500மி. திட்டம்

உலகப் பருவநிலை ஒரு நிலையிலி ருந்து வேறோர் நிலைக்கு வழக்கத் தைவிட அதிகமாக மாறிவரும் சூழலில் சிங்கப்பூரிலுள்ள வடி கால், கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளுக்காக பொதுப் பயனீட் டுக் கழகம் அடுத்த இரண்டிலி ருந்து மூன்று ஆண்டுகளுக்கு $500 மில்லியன் செலவிட உள் ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்டு உள்ள கால்வாய் மேம்பாட்டுப் பணிகளையும் கணக்கில் கொள் ளும்போது இதற்காக செலவிடப் படும் தொகை $1.2 பில்லியனை எட்டும். புக்கிட் தீமா சாலை சிக்ஸ்த் அவென்யூவிலிருந்து கிளமெண்டி சாலைவரை ஓடும் புக்கிட் தீமா மாற்றுப் பாதை கால்வாய் உட்பட சிங்கப்பூரின் 75 இடங்களில் உள்ள வடிகால், கால்வாய்கள் தற் பொழுது விரிவுபடுத்தப்படுகின் றன. இவற்றுடன், அடுத்த ஆண்டில் மேலும் 16 இடங்களில் உள்ள வடிகால், கால்வாய்களில்தான் மேம்பாட்டுப் பணிகளை மேற் கொள்ளவிருப்பதாகக் கழகம் தெரிவித்துள்ளது.

‘மிலிட்டரி ஹில்’ என்ற இடத்தில் ஆறு மீட்டர் சுற்றளவு கொண்ட புதிய சுரங்கத்தை ஊழியர்கள் அமைத்துக் கொண் டிருக்கிறார்கள். இடப்பக்கத்தில் 4.2 மீட்டர் சுற்றளவு கொண்ட பழைய சுரங்கம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்