You are here

சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவில் ‘ஏஞ்சல்’, ‘தையல்’

  • படம்: சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழா

நெருக்கமாக இருந்த பாட்டியின் இறுதிச் சடங்குகளை செய்ய விரும்புகிறார் ஆனந்த். பாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்ற போராடும் ஆனந்தை மைய மாகக்கொண்டது ‘ஏஞ்சல்’ குறும்படம். உணர்ச்சிகளைத் தூண்டி பார்ப்பவர் மனதை எளிதில் நெகிழவைக்கும் இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார் 34 வயது டோன் அரவிந்த். 2005ஆம் ஆண்டு வாழ்க் கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை குறும்படமாக அவர் எடுத்துள்ளார். மறக்கமுடியாத அந்தச் சம்பவத்தைக் குறும்படமாக எடுக்க வேண்டும் என்று விரும்பிய டோன், “உணர் வுபூர்வமாக தயாராக இல் லாததால் இதுவரை இந்த முயற்சியில் நான் இறங்க வில்லை,” என்றார். பாட்டி காலமானபோது வீட்டில் நிகழ்ந்தவற்றையும் தமக்குள் தோன்றியவற்றை யும் தத்ரூபமாக சித்திரிக்க முயன்ற அவர், இந்தப் படத்தில் மரணம், குடும்ப உறவுகள், கடமை உணர்வு போன்றவற்றை ஆராய்கிறார். சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத் தில் வரும் 28, 29ஆம் தேதிகளில் நடை பெறவுள்ள ‘சிங்கப்பூர் பனோரமா’வில் ‘ஏஞ்சல்’ குறும்படத்துடன் மொத்தம் 11 குறும்படங்கள் திரையிடப்படும்.

லாவண்யா கிருஷ்ணாவின் தயாரிப்பான தையல் குறும்படத்தில் ஒரு காட்சி. மேல் படத்தில் லாவண்யா. படம்: சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழா