You are here

திறன்பேசிகள் புதிதுபோல் இருக்க...

நாட்கள் செல்லச் செல்ல திறன் பேசிகளின் செயல்திறன் குறை வதைக் காணலாம். புத்தம் புதிதாக இருந்தபோது எப்படிச் செயல்பட்டதோ, இப்போதும் அப்படியே இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். புதிதாக வாங்கியபோது அவை எப்படிச் செயல்பட்டனவோ, அப் படியே தொடர்வதில்லை. இதனால் நாம் சற்று ஏமாற்றமடையலாம். இருந்தபோதும், சில எளிமையான விஷயங்களைக் கையாண்டால் திறன்பேசியின் செயல்திறனை, கிட்டத்தட்ட அதைப் புதிதாக வாங்கியபோது எப்படி இருந்ததோ, அதைப் போன்று நீடிக்கச் செய்யலாம். உறையும் திரைக் காப்பானும்: திறன்பேசிக்கு உறையிடுவதும் ‘ஸ்கிரீன் புரொடெக்டர்’ எனும் திரைக் காப்பானை ஒட்டுவதும் நல்லது. முக்கியமில்லை என்று சிலர் நினைத்தாலும், திறன் பேசியை எப்போதும் புதிதுபோல் வைத்திருக்க உறையும் திரைக் காப்பானும் போடுவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஒரு சில வேளைகளில் கைதவறி திறன்பேசியைக் கீழே போட்டு விட்டாலும் அது உடையாமல் இருக்க உறையும் திரைக் காப்பானும் கைகொடுக்கும்.