You are here

சவால்மிக்க துறையில் சாதிக்கும் இளையர்கள்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிக்கல்களும் சவால்களும் நிறைந்த உணவு பானத் துறையில் ஈடுபட பல இளையர்கள் தயங்கும் வேளையில், இத்துறையில் ஆர்வத்துடன் இறங்கியுள் ளனர் சகோதர்கள் 28 வயது மகேந்திரன் சண்முகம், 26 வயது விக்னேஸ்வரன் சண்முகம். இருபத்தோரு ஆண்டு நிறைவை அடைந்துள்ள ‘காயத்ரி’ உணவகத் தில் சிறு வயது முதல் வேலை செய்திருந்தபோதிலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப உணவகத்தை நடத்துவது சுலபம் அல்ல என்றார் சுவிட்சர்லாந்தின் ‘ஏக்கோல் லே ரோஷ்’ பல்கலைக்கழகத்தின் ஹோட்டல் நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றிருக்கும் மகேந்திரன். “$2,400 வரை சம்பளம் வழங்கி னாலும் உணவகங்களில் பணியாற்ற சிங்கப்பூரர்கள் முன் வருவதில்லை,” என்ற அவர், ஆண்டுதோறும் ஊழியர்களின் வேலைத் திறனுக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கினாலும் பலர் பாதியிலேயே வேலையை விட்டு நின்றுவிடுகின்றனர் என்றார்.

உணவு, பானத் துறையில் இந்திய இளையர்கள் ஈடுபட முன்வர வேண்டும் என்று கூறும் சகோதரர்கள் மகேந்திரன் சண்முகம், விக்னேஸ்வரன் சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்