You are here

கார்த்தி: சில சம்பவங்களைக் காணும்போது கோபம் வருகிறது

‘தீரன் அதிகாரம் ஒன்று’ ரசிகர்களின் பார்வைக்குத் தயாராகிவிட்டது. படம் குறித்த எதிர்பார்ப்பு கார்த்தி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், காவல்துறை யினர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. காவல்துறையினரும் நம்மில் ஒருவர்தான் என்பதை அழகாகவும் அழுத்தம் திருத்தமாகவும் இப்படத்தில் சொல்லி இருக்கிறார்களாம். ஏற் கெனவே பல பேட்டிகளில் இதுகுறித்து விவரித்துள்ள கார்த்தி, தற்போது இப்படம் குறித்து மேலும் சில புதுத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

“காவல்துறை அதிகாரி தீரனின் வாழ்க்கையை மாற்றிய ஒரு வழக்குதான் இப்படத்தின் கதை. நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே ‘நான் மகான் அல்ல’ படத்தில் நான் செய்த கதாபாத்திரம்தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அதை அப்படியே பிரதிபலித்து இருப்பேன். “இந்தப் புதிய படத்தின் நாயகன் தன் வீட்டில் இருக்கும்போது ‘நான் மகான் அல்ல’ படத்தில் வருவது போல துருதுரு பையனாக இருப்பான். காவல் நிலையத்தில் இருக்கும்போது வேறு விதமாக இருப்பான்,” என்கிறார் கார்த்தி.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி, ரகுல் பிரீத் சிங்