You are here

நம்பகத்தன்மையும் ஒற்றுமையும் அவசியம்’

வடகொரியா, தென்சீனக் கடல் போன்ற வட்டார மற்றும் அனைத் துலக ரீதியில் அக்கறைக்குரிய விவகாரங்களில் ஆசியான் நாடு கள் ஒற்றுமையுடனும் நம்பகத் தன்மைமிக்கதாகவும் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கிய 31வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்று உரையாற் றிய திரு லீ, தனது அனைத் துலகக் கடமைகள், கடப்பாடு களின்படி நடந்துகொள்ளுமாறு வடகொரியாவை வலியுறுத்த வேண்டும் என்று சக ஆசியான் தலைவர்களைக் கேட்டுக்கொண் டார்.

“தென்சீனக் கடல் பிரச்சினை யைப் பொறுத்தமட்டில், பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க எல்லா தரப்பினரும் எடுக்கும் கூட்டு முயற்சிகளை வரவேற்கிறோம்,” என்று பிரதமர் லீ தெரிவித்தார். ஆசியான் அமைப்பின் தலை மைத்துவத்தை சிங்கப்பூர் அடுத்த ஆண்டு ஏற்க இருக்கும் நிலையில், எந்த விஷயங்களில் கவனம் செலுத்தப்படும் என்பதை யும் அவர் கோடிகாட்டினார்.