You are here

‘சவூதி போர்க் கப்பல்களைத் தகர்ப்போம்’: கிளர்ச்சியாளர்கள்

துபாய்: சவூதி தலைமையிலான கூட்டணிப் படை ஏமனில் உள்ள துறைமுகங்களை மூடியதைத் தொடர்ந்து அதற்குப் பதிலடியாக எதிரி நாடுகளின் போர்க் கப்பல் களையும் எண்ணெய் கிணறு களையும் தாங்கள் தகர்க்கக்கூடும் என்று ஏமனில் உள்ள ஆயுதம் ஏந்திய ஹுதி கிளர்ச்சிப் படையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இம்மாதம் 4 ஆம் தேதி ரியாத் விமான நிலையத்தை நோக்கி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை வீசப்பட்டதற்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹுதி கிளர்ச்சி யாளர்களே காரணம் என்று சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.

அந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக அத்தாக்குதல் நடத்தப் பட்ட இரு நாட்களுக்குப் பிறகு சவூதி தலைமையிலான கூட்டணிப் படை ஏமனில் அனைத்து துறை முகங்களையும் சென்ற வாரம் மூடியது. ஆயுதங்கள் கிளர்ச்சியாளர் களுக்குக் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் அந்த துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளதாக கூட்டணிப் படை கூறுகிறது. ஏமன் துறைமுகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தால் ஏமனில் பஞ்சம் ஏற்படும் என்றும் இதனால் மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் ஐநா தெரிவித் துள்ளது.

ஏமனில் தலைநகர் சானா உட்பட பல பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன. அனைத்துலக ரீதியில் அங்கீகரிக் கப்பட்ட ஏமன் அதிபர் ரஃப்பு மன்சூர் ஹாடி தற்போது ஏடன் நகரில் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக சவூதி தலைமையிலான கூட்டணிப் படை ஏமனில் தாக்குதல் நடத்தி வரு கிறது. கூட்டணிப் படை ஏமனில் கிளர்ச்சியாளர்களின் இலக்கு களைத் தாக்கினால் ஹூதி கிளர்ச்சிப் படை சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிணறுகளைக் குறிவைத்துத் தாக்கும் என்று ஹுதி சுப்ரீம் புரட்சிக் குழுவின் தலைவர் முகமது அலி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.