You are here

பொறியியல் பணிக்கு கூடுதல் நேரம் தேவை

பழைய ரயில் கட்டமைப்பின் பாகங் களை மேம்படுத்த பொறியியல் பணிக்குக் கூடுதல் நேரம் தேவைப் படுவதாக போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரி வித்துள்ளார். இதன் விளைவாக ரயில் சேவைக்கான நேரம் குறைக் கப்படும். இதுவரை தண்டவாளக் குறுக்குச் சட்டங்கள், மூன்றாவது தண்டவாளம் ஆகிய இரண்டு பாகங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமிக்ஞை முறை, மின்சாரச் சேவை, ரயில்கள், தண்டவாள சமிக்ஞை சாதனங்கள் ஆகிய வற்றை இனி மேம்படுத்தவேண்டும் என திரு கோ கூறினார்.

“இதன் விளைவாகப் பொறி யியல் பணிக்காக எங்களுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. ரயில் சேவைக்கான நேரத்தைக் குறைத்தால்தான் இந்தத் தேவை யைப் பூர்த்தி செய்ய முடியும்,” என்று பணிமனைகள், ரயில்களுக் கான எதிர்கால ரயில் தொழில்நுட்ப நிகழ்வில் கலந்துகொண்ட திரு கோ கூறினார். இந்த நிகழ்வு எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் துவாஸ் வெஸ்ட் பணிமனையில் நேற்று நடை பெற்றது. துவாஸ் வெஸ்ட் பணிமனை கடந்த ஜூன் மாதத்தில் திறக்கப் பட்டது.

அப்பணிமனையில் ஒரு மின்சாரத் துணை நிலையம் உள்ளது. இந்த மின்சாரத் துணை நிலையம் ரயில் கட்டமைப்பின் மின் திறன் கொள் அளவை 50 விழுக்காடு உயர்த்தியுள்ளது. பழைய மின்சாரத் துணை நிலையங்களில் உள்ள சாதனங்கள் பழையன ஆகிவிட்டதாகவும் அவற்றைப் புதுப்பிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் திரு கோ கூறினார்.