You are here

இருநூறு போலி மருத்துவர்கள் கைது: சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

மதுரை: போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி எச்சரித்துள் ளார். தமிழகம் முழுவதும் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர் தெரிவித்தார். போலி மருத்துவர்களைக் கண்டறிய தனியாக ஒரு குழு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மதுரையில் மட்டும் 12 போலி மருத்துவர்கள் கைதாகி இருப்பதாகக் கூறினார். “தமிழகத்தில் இதுவரை 16 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாகக் குறைந்து உள்ளது. காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் செயல்படும். தனியார் மட்டுமின்றி அரசு நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்,” என்றார் குழந்தைசாமி.