You are here

ஈரான், ஈராக்கில் நிலநடுக்கம்: 348 பேர் பலி; பலர் காயம்

பாக்தாத்/அங்காரா: ஈரான், ஈராக் நாடுகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தில் குறைந் தது 348 பேர் உயிரிழந்ததாகவும் 6,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் இரு நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்னும் பலரைக் காணவில்லை என்பதால் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டி ருக்கின்றன. ஈரானின் தொலைவான பகுதி களில் தேடும் பணிகள் தொடரும் போது மரணமடைந்தோரின் எண் ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

7 முதல் 7.9 வரை ரிக்டர் அளவில் பதிவாகும் நிலநடுக்கம் மாபெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரானின் கிராமப் புறங்களில் வீடுகள் மண்ணால் செய்யப்பட்டவையாக இருப்பதால் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் அவை எளிதில் சரிந்து வருகின் றன. ஈரானின் பல மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலை யில், கெமான்ஷா மாநிலம் ஆக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருவ தாகவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் 100 பேர் கெமான்ஷாவின் சர்பொல்=எ=ஸஹாப் எனும் நக ரில் மரணமடைந்தனர். அப்பகுதி, ஈராக் எல்லையிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஈரான் தலைநகரின் முக்கிய மருத்துவமனை நிலநடுக்கத்தால் கடுமையான சேதமடைந்துவிட்ட நிலையில் காயமடைந்த நூற்றுக் கணக்கானோருக்கு அங்கு சிகிச்சை அளிக்கமுடியாத அவல நிலை நிலவுகிறது என்று ஈரான் அவசர சேவை அமைப்பின் தலைவர் பிர்ஹுசைன் குலிவான்ட் கூறியிருக்கிறார்.