You are here

நீடிக்கும் கனமழை; பள்ளிகளுக்கு நேற்றும் விடுமுறை

சென்னை: கனமழை காரண மாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை கனமழை புரட்டிப் போட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங் களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு சென்னையில் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. மழை நீர் சாலைகளில் பரவலாக தேங்கியதாலும் கனமழை நீடிக் கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததா லும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை அம்மாவட்டங்களின் ஆட்சி யர்கள் வெளியிட்டனர். தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உரு வாகியுள்ளது என்றும், அந்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய் யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.