You are here

முதல்வர்: ஆண்டுதோறும் தூர்வாரும் பணிகள்

சென்னை: நீர்நிலைகளை தூர்வார காலதாமதமாக நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு தூர் வாரும் பணிகள் நடை பெற்று வருவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாழ்வான பகுதிக ளில் இருந்த நீர் முற்றிலு மாக வெளியேற்றப் பட்டுள்ளது என்றார். “காஞ்சிபுரம், திருவள் ளூர் ஏரிகள் நிரம்பியதால், அங்கு தாழ்வான பகுதிக ளில் கட்டப்பட்ட குடியிருப்பு களில் நீர் தேங்கியது.

“எனினும் அங்கும் தற்போது நீர் வெளியேற்றப் பட்டுள்ளது. இனி மழை பெய்தாலும் நீர் உடனடியாக வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன,” என்றார் முதல்வர். குடிமராமத்து திட்டத் தால் நீர்நிலைகளில் அதிக ளவில் நீர் தேக்கப்பட் டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 5 நாளில் பெய்ததே வெள்ள நீர் சூழக் காரணம் என சுட்டிக்காட்டினார். மொத்தம் 56.6 சென்டி மீட்டர் அளவு மழை பெய்தி ருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.