You are here

நீர்த்தேக்கத்தைப் பார்வையிட்ட

சுல்தான் இஸ்கந்தர் குனுங் புலாயில் உள்ள நீர்த் தேக்கத்தையும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் நேற்று முன்தினம் பார்வையிட்டார். 1924ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுல்தான் இப்ராகிம் நீர்த்தேக்கம், நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியன ஜோகூர்பாரு வுக்கு வடக்கே அமைந்துள்ளன. முன்னறிவிப்பு ஏதுமின்றி நீர்த் தேக்கத்தைப் பார்வையிட்ட சுல்தான், அந்தப் பகுதி தூய்மை யாகவும் சீராகவும் பராமரிக்கப் படுகிறதா என்பதை ஆய்வு செய்த தாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அப்போது, ஜோகூருக்கு நீர் விநியோகம் செய்யும் எஸ்ஏஜெ ரான்ஹில் நிறுவனத்தின் தலைவர் ஹமடான் முகமது சுல்தானுக்கு விளக்கம் அளித்ததாகவும் அந்த செய்தி குறிப்பிட்டது. கூலாய் மாவட்டத்தில் 52.6 ஹெக்டர் நிலப்பரப்பில் நீர்த்தேக்க மும் நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைந்துள்ளன. அதில் 1,220 மில்லியன் கேலன் அளவிலான தண்ணீரைச் சேமிக்க முடியும். தற்போதைய ஜோகூர் சுல்தானின் கொள்ளுத் தாத்தா வின் காலத்தில் இந்த நீர்த்தேக்க வசதி உருவாக்கப்பட்டது. 1961ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தண்ணீர் ஒப்பந்தம் காலாவதி யானதை அடுத்து குனுங் புலாய் நீர்த் தேக்கத்தையும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் சிங்கப்பூர் 2011ஆம் ஆண்டு ஜோகூர் வசம்